அதிவேக சுவாசம்

அதிவேக சுவாசம் முதலுதவி பற்றி அறிந்திருப்பவரால் கையாளக்கூடிய மிக எளிமையான ஒரு நிலைமையாகும். உணர்ச்சிவசப்படுதல், உளவியல் ரீதியிலான அதிர்ச்சி, பதற்றம், “கூடாத செய்தி” என்பவற்றால் சுவாசித்தல் சம்பந்தமான பிரச்சினைகள் எழுகின்றன. பாதிப்புற்றவர் வேகமாக, ஆழமாக சுவாசிக்கலாம். ஒருவரில் வழமையான சுவாச வீதம் நிமிடமொன்றுக்கு ஏறக்குறைய 16 – 18 (வளர்ந்தவர் ஓய்விலிருக்கும்போது) ஆகும்.


அறிகுறிகளும் அடையாளங்களும்
மருத்துவ வரலாறு
பாதிப்புற்றவர் பதற்றம் கொள்கின்றார், வேகமாக, ஆழமாக சுவாசிக்கின்றார்.
பாதிப்புற்றவர் தமக்குக் காற்றே வராதது போன்று உணர்கின்றார்.
கைவிரல்கள், கால் விரல்கள், உதடுகள் கூசுதல்.
நரம்புப்பிடிப்பு விரல்களை விரிக்க முடியாமை.

குறிக்கோள்
சாதாரண சுவாசத்தை மீண்டும் நிலைநாட்டுதல்.
குருதியில் காபனீரொட்சைட்டின் மட்டத்தை அதிகரித்தல்.

பரிகாரம்
பாதிப்புற்றவரை அமைதியாக இருக்கச் சொல்லவும். அவருடன் திடமாகக் கதைக்கவும்.
சுவாசிக்கும் அறிவுரைகள் வழங்கி சுவாசத்தின் வேகத்தைக் குறைக்கவும்.
முடியுமாயின் கடதாசிப் பை, கூப்பிய கைகள் என்பவற்றினுள் சுவாசித்து காபனீரொட்சை மீண்டும் உடலினுள் செலுத்தச் செய்யவும்.