ஒவ்வாமை சார்ந்த எதிர்த்தாக்கம் (Allergic Reaction)
பின்னணித் தகவல்
ஒவ்வாமையின் பாரதூரமான எதிர்ச் செயற்பாடுகள் அபூர்வம். ஆனால் சுவாசப்பாதை அல்லது சுவாசம் பாதிக்கப்பட்டால் ஒரு சில நிமிடங்களில் மரணம் ஏற்படலாம்.
பொதுவான ஒவ்வாமை காய்கள், முட்டை அல்லது பால் உற்பத்திப் பொருட்கள், பூச்சிக்கடி, கடலுணவு, (பென்சிலின் போன்ற) மருந்துகள் என்பவற்றால் ஏற்படுகின்றன.
பாதிப்பின்மை முறைமைக் கலங்கள் “ அந்நிய புரதம் ” ஒன்றை கண்டுபிடித்தால் அவை விடுவிக்கும் பிரதான இரசாயனப் பொருள் “ இஸ்தமைன் ” என அழைக்கப்படும். நிலைமையின் அறிகுறிகளையும் அடையாளங்களையும் விளைவிக்கும் ஒவ்வாமை சார்ந்த எதிர்செயற்பாட்டின்போது பிரமாண்டமான அளவிலான இந்த “ இஸ்தமைன் ”; எனப்படும் பொருளே உடலினுள் விடுவிக்கப்படுகிறது.
பாதிப்புற்றவருக்கு ஏற்படும் பிரதான பிரச்சினை சுவாசிப்பதிலுள்ள சிரமமாகும். இது அச்சத்திற்குரியது மட்டுமல்லாமல் உயிருக்கும் ஆபத்தானது.
அறிகுறிகளும் அடையாளங்களும்
முகம், நாக்கு, உதடுகள், கழுத்து மற்றும் கண்களில் சடுதியான வீக்கம்
சுவாசிப்பதில் சிரமம் ( பாதிப்புற்றவர் தொய்வினால் பாதிக்கப்பட்டதைப் போன்ற அதே நிலைமையில் இருப்பார். அத்துடன் சுவாசப்பாதையிலும் வீக்கம் ஏற்படும்)
வேகமாக ஆனால் பலவீனமான நாடித்துடிப்பு
சருமத்தில் சிவப்பு நிறத்திலான சொறிகள்
பதற்றம்
இந்த அறிகுறிகள் அனைத்துமே தென்படுவதில்லை. அது தாக்கத்தின் அளவைப் பொறுத்தது.
குறிக்கோள்
அவசரமான மருத்துவ உதவி பெறுதல்
பரிகாரம்
அம்பியூலன்ஸ் வண்டிக்கு போன் பண்ணவும். பாதிப்புற்றவரின் நிலைமைபற்றி கூடியவரை போதிய அளவிலான தகவல் தரவும்.
சுயநினைவுடனிருக்கும் நோயாளியை இருத்தி சுவாசத்தை இலகுவாக்கவும்.
உதவி வரும்வரை அவரது சுவாசத்தை கண்காணிக்கவும்.
பாதிப்பற்றவர் மூர்ச்சித்தால் சுவாசப்பாதையையும் சுவாசத்தையும் அவதானிக்கவும் தேவைப்படின் மீளுயிர்ப்பிக்கவும்.
தனியாக இருப்பின்
அம்பியூலன்ஸ் ஒன்று கிடைக்காவிட்டால் பாதிப்புற்றவரை அமர்ந்த நிலையில் அல்லது தேறும் நிலையில் ஏற்றிச்செல்லக்கூடிய ஒரு வாகனத்தை தேர்ந்தெடுக்கவும்
முச்சக்கரவண்டியை பயன்படுத்த வேண்டாம்.


