தொய்வுக்கான (ஆஸ்மா) (Asthma)
தொய்வுக்கான (ஆஸ்மா) அறிகுறிகளும் அடையாளங்களும்
பரிகாரமும்
பின்னணி தகவல்
தொய்வு மிகுந்த இரட்டல் தரும் ஒரு நிலைமையாகும். வீக்கம் காரணமாக இது சுவாசப்பாதையை சுருங்க வைக்கின்றது. இந்த இழையங்கள் தடித்த, பிசுபிசுப்பான சளியைச் சுருங்க வைக்கின்றது. இதனால் சுவாசித்தல் மேலும் சிரமமாகின்றது.
பல காரணிகள் தொய்வுத் தாக்கத்தைத் தூண்டிவிடுகின்றன. பொதுவான காரணிகளுள் காற்று மோசமடைதல், சிகரட் புகை, மகரந்தம், தூசி, பதற்றம், படபடப்பு என்பனவாகும்.
இந்நோயால் அவதிக்குட்படுபவர்களுக்கு இந்நோய் ஏற்பட்டால் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது நன்கு தெரியவரும். உற்சுவாசத்தின் போது பயன்படுத்தும் இன்ஹேலர் மூலம் காற்றை உள்ளெடுப்பது பிரதானமான ஆஸ்துமா நோயாளியின் மருத்துவ செயற்பாட்டில் ஒன்றாகும். இந்தத் தன்னிச்சையான இன்ஹேலானது அதிகமாக நோய் அறிகுறிகளைக் குறைக்கின்றது.
இதற்கென மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் வெற்றி மற்றும் நோயாளிகள் தாமே செய்துகொள்ளக் கூடிய பரிகாரங்களும் இருக்க அனைத்து வயதெல்லையிலும் உள்ள நோயாளிகள் கடுமையான ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு கூடிய வீதத்தினர் ஒவ்வொரு வருடமும் இறப்புக்குள்ளாகின்றனர். ஆஸ்துமா நோயால் அவதிப்படும் ஒருவருக்கு திடீரென ஏற்படக்கூடிய நோய் நிலைமைகளுக்கு முகங்கொடுக்கத் தயாராக இருக்கவேண்டும்.
அறிகுறிகளும் அடையாளங்களும்
சுவாசிப்பதில் சிரமம்
நபர் சுவாசிக்கும்போது இளைக்கும் சத்தம்
படபடப்பு, பதற்றம்
கடுமையான நிலைமைகளில் பாதிப்புற்றவர் கதைக்க சிரமப்படுவார்
உதடுகள் நீல நிறமாதல்
நாடி வேகமாகத் துடிக்கக்கூடும்.
அவசரமான மருத்துவ உதவி கோரவும்
குறிக்கோள்
பாதிப்புற்றவரின் சுவாசத்தை இலேசாக்குதல்
அவசரமாக மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்தல்
பரிகாரம்
பாதிப்புற்றவருக்குத் தைரியமூட்டவும்.
பாதிப்புற்றவர் சௌகரியமான ஒரு நிலையில் அமர்ந்திருக்க உதவவும். ஒரு மேசை அல்லது கதிரை முதலியவற்றைப் பிடித்துக்கொண்டு சற்று முன்னால் சாய்ந்திருக்கலாம்.
சுத்தமான காற்றை உள்ளே வரவிடவும். மகரந்தம், வாகனத்திலிருந்து வெளியேறும் புகை போன்றவற்றால் வெளியில் காற்று மாசடைதல் தாக்கத்திற்கான காரணியாக அல்லாதவிடத்து கூடுமானால் யன்னல் ஒன்றைத் திறந்துவிடவும்.
பாதிப்புற்றவருக்கு ஓர் விசிறி உதவியாக இருக்கலாம்.
பாதிப்புற்றவருக்கு தமது சொந்த மருந்தை எடுக்கவிடவும்.


