கடிகளும் கொட்டுதல்களும்
பின்னணித் தகவல்
கடிகளும் கொட்டுதல்களும் விசேடமாக சிறுவர்களுக்கும் வலியையும் துயரத்தையும் தரக்கூடியவவை. பல நாடுகளில் நஞ்சைப் பாய்ச்சக்கூடிய பாம்புகள், சிலந்திகள், நட்டுவக்காலி மற்றும் ஏனைய பூச்சிகள் உள்ளன. இவை மரணத்தை விளைவிக்கக்கூடியன.
பலருக்கு கொட்டுதல்களுக்குப் பாரிய அளவில் ஒய்வாமையை ஏற்படுத்தும்.
விலங்குக் கடிகள்
பின்னணித் தகவல்
ஒருவிலங்கு கடிக்கும்போது இரண்டு வகையான காயங்கள் ஏற்படுகின்றன.
இழையத்தை கசங்க வைக்கும் மேலோட்டமான கிழிவுக் காயம்
ஆழமான துணைக் காயம்
துளைக் காயத்தில் கிருமிகள் ஆழமாகப் பாய்ச்சப்படுவதால் அது பாரிய பிரச்சினையை ஏற்படுத்துகின்றது.
குறிக்கோள்கள்
ஆபத்து, பதிலளித்தல், சுவாசப்பாதை, சுவாசம், குருதிச் சுறறோட்டம் என்பவற்றை அவதானிக்கவும்.
மேலோட்டமான காயத்திற்குக் குறைந்தது ஐந்து நிமிடங்களுக்காவது ஓடும் நீரை ஊற்றவும்
சோப்பும் நீரும் கொண்டு காயத்தை கழுவவும்
காய்ந்ததும் உலர்ந்த கட்டுத் துணியால் மூடவும்
மருத்துவ ஆலோசனை பெறுமாறும் ஏற்புவலித் தடுப்பு மற்றும் விலங்கு விசர் தடுப்பு ஊசி தேவையா என விசாரிக்குமாறும் பாதிப்பற்றவரிடம் கூறவும்.
மேலும் பாரதுரமான காயங்களுக்கு நேரடி அழுத்தம் கொடுத்து குருதிக் கசிவைக் கட்டுகப்படுத்தவும்.
சுத்தமான கட்டுத் துணியால் மூடி பாதிப்புற்றவரை மருத்துவரிடம் அனுப்பவும் அல்லது கூட்டிச் செல்லவும்.
பூச்சிக் கடி
பின்னணித் தகவல்
பூச்சிக் கடிகள் நோவைத் தரக்கூடியவை. எனினும் பாதிப்புற்றவர் ஒவ்வாமைக்கு ஆளானவராக இருந்தால் கடியானது வாயில் இடம்பெற்றால் அல்லது பல தடைவ கடிக்கப்பட்டால் தவிர இதனால் சிக்கல் எதுவும் வரமாட்டாது.
குறிக்கோள்கள்
வலியையூம் வீக்கத்தையும் தணித்தல்
மருத்துவ உதவி பெறுதல்
பரிகாரம்
ஆபத்து, பதிலளித்தல், சுவாசப்பாதை, சுவாசம், குருதிச்சுற்றோட்டம் என்பவற்றை மதிப்பிடுசெய்யவும்.
கண்ணுக்கு தென்பட்டால் கொடுக்கை குறடுப் பிடியால் எடுத்துவிடவும். தொடுத்துள்ள நச்சுப் பையை நசுக்கிவிட வேண்டாம் ( குறடுப் பிடியால் எடுக்க முடியாவிட்டால்)
வலியையும் வீக்கத்தையும் தனிப்பதற்கு குளிர் ஒத்தடம் கொடுக்கவும்.
அடுத்த நாள் வரை வலியும் வீக்கமும் குறையாவிட்டால் மருத்துவ ஆலோசனை பெறுமாறு பாதிப்புற்றவரிடம் கூறவும்.
பாதிப்புற்றவர் குளவிகளால் வாயில் கடிபட்டிருந்தால் ஐஸ் கட்டியை சூப்புமாறு கடிபட்டவரிடம் கூறவும்.
ஐஸ் கட்டி இல்லாவிடில் பொருத்தமான குளிர்த பானங்களைப் பருக்கவும் மருத்துவமனைக்கு அவசரமாக எடுத்துச் செல்லவும் பாதிப்புற்றவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லக் காத்திருக்கும் அதேவேளை பதிலளித்தல், சுவாப்பாதை, சுவாசித்தல், குருதிச் சுற்றோட்டம் என்பவற்றையும் அவதானிக்கவும்.
பாதிக்கப்பட்டவரை மிகவும் சௌகரியமான நிலையில் வைத்திருக்கவும்.
பாதிப்புற்றவரை அமைதியாக வைத்திருக்கவும். அவருக்கு தைரியமளிக்கவும்
பதிலளித்தல், சுவாசப்பாதை, சுவாசம், குருதிச்சுற்றோட்டம் என்பவற்றை அவதானிக்கவும் மீளுயிர்ப்பித்தலுக்கு தயாராயிருக்கவும்.
அவசரமாக மருத்துவ உதவிக்கு எடுத்துசெல்ல ஒழுங்குசெய்யவும்.
பாம்புக்கடி
பின்னணித் தகவல்
பாம்புக்கடி
பாம்புக் கடியால் இறக்கும் அதிக எண்ணிக்கையையுடைய உலக நாடுகளில் இலங்கையும் ஒன்று. விஷப் பாம்புக் கடியால் எப்போதும் விஷமேறமாட்டாது. நோயாளி விஷமேறும் குறிகளைக் காட்டினால் மட்டுமே தற்காலத்தில் விஷமுறிவூ சிகிச்சை அளிக்கப்படுகின்றது. அத்தகைய அறிகுறிகள் காணப்படாவிட்டால் ஏனைய விலங்குள் கடிக்குரியதைப் போன்ற அதே சிகிச்சையே அளிக்கப்படும். பின்வருபவற்றை அவதானித்தல் அவசியம்
எல்லாப் பாம்புகளும் கடிக்கமாட்டா
எல்லாப் பாம்புக் கடிகளும் விஷமாகமாட்டா
எல்லாப் விஷப் பாம்புக் கடிகளாலும் மரணம் ஏற்படமாட்டா
விஷப் பாம்புகள்
நிலத்திலும் நீரிலும் கடலிலும் வாழும் 93 வகையான பாம்புகள் இலங்கையில் உள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை கடிக்க மாட்டா. ஒரு சில பாம்புகள் மிகவும் விஷமுள்ளவை. பாம்புக் கடியால் ஏற்படும் இறப்புகளுள் பெரும்பாலானவை தரையில் வாழும் ஐந்தில் நான்கு பாம்புக் கடிகளால் ஏற்படுபவையே. இவை விரியன், நல்லபாம்பு, பொது விரியன் மற்றும் இலங்கை விரியன் என்பனவாகும்.
தடுத்தல்
பாம்புகள் பொதுவாக மனிதர்கள் வாழும் இடங்களிலேயே காணப்படுகின்றன. இந்த நாட்டில் பாம்பின் அருகில் செல்வதைத் தவிர்ப்பதன் மூலம் பாம்புக் கடியால் ஏற்படும் இறப்பைக் குறைக்கலாம். பின்வரும் நடவடிக்கைகள் சிபார்சு செய்யப்படுகின்றன.
பாம்புக்கடிகள் பெரும்பாலும் காலிலேயே ஏற்படுகின்றன. பாம்பு காணப்படும் இடங்களில் நடக்கும்போது அல்லது வேலைசெய்யும்போது சப்பாத்துக்களை அல்லது பாதணிகளையும் கணுக்கால் வரை நீளமான உடைகளையும் அணிவதன்மூலம் காலையும் பாதங்களையும் பாதுகாக்கவும். நீண்ட புல், புதர்கள், காட்டு வழிகள், விவசாயக் காணிகள் ( குறிப்பாக அறுவடை,களைப் பிடுங்குதல் போன்ற நேரங்களில்) வழமையாக பாம்புகள் காணப்படும்.
பாம்புகள் காணப்படும் வழிகளில் நடக்கும்போது தடியொன்றை எடுத்துச் செல்லவும். நீங்கள் செல்லும் வழியிலுள்ள புற் பூண்டுகளை அடிப்பதற்கு அதனைப் பயன்படுத்தவும். இரவில் பாம்பு மிதிபடுவதைக் தவிர்ப்பதற்கு விளக்கொன்றை எடுத்துசெல்லவும்.
காலை ஊன்றி நடப்பதன்மூலம் நீங்கள் வருவதையிட்டு பாம்புக்கு எச்சரிக்கை செய்யுங்கள். பாம்புகளுக்கு காற்றின் ஒசை கேட்கமாட்டாது. ஆனால் நில அதிர்வுக்கு நுண் உணர்வுடையன.
எறும்புப் புற்று, மரப் பொந்துகள், புதர்கள், மரக்கட்டையின் அடிப்பகுதி என்பவற்றுள் கையைப் போடவேண்டாம். மனித நடமாட்டமுள்ள பகுதிகளில் பாம்பு இருக்கக்கூடிய இடங்களை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். எறும்புப் புற்றுக்களை அழித்தும் மரப் பொந்துகளை அடைத்துவிடவும். மரக்கட்டைகள், கற்பாறைகள் என்பவற்றுக்கடியில் பாம்பு இருக்கக்கூடும். ஆதலால் நீங்கள் வேலை செய்யும்போது அவற்றை அகற்ற வேண்டியிருந்தால் கவனமாக இருக்கவும்.
குப்பை கூழங்களை அவ்வப்போது அகற்றி உங்கள் சுற்றாடலில் பாம்பைக் கவரக்கூடிய எலி, தவளை, பல்லி முதலியன வராமல் பார்த்துக்கொள்ளவும்.
தெரிந்தவர்கள் மட்டுமே பாம்புகளைக் கையாளுதல் அல்லது வளர்த்தல் வேண்டும். இறந்ததுபோல் காணப்படும் பாம்பைக் கவனமாக கையாள வேண்டும். ஏனெனில் இதற்கு உயிர் இருக்கக்கூடும். செத்த பாம்புகூட தன்னை அறியாமலேயே கடிக்கக்கூடும்.
முதலுதவி
பாம்பினால் கடிபட்டவர்களுக்கு எப்போதும் பயனுறுதியுள்ள முதலுதவி அளிக்கப்படல் வேண்டும். இழையங்களிலுள்ள விஷத்தை குறைப்பதற்கு அல்லது தடுப்பதற்கு ஏனைய சிக்கல்கள் ஏற்படுவதையும் தடுப்பதற்கு அல்லது குறைப்பதற்கு இது உதவும். தவறான முதலுதவியால் கெடுதல் ஏற்படக்கூடும்.
கீழ் வருவவை சரளமான, செயற்படுத்தக்கூடிய, பயனுறுதியுள்ள அத்துடன் பாதுகாப்பான ஏற்றுக்கொள்ளப்பட்ட சில வழி முறைகளாகும்.
பாம்புக் கடியையடுத்து ஏற்படக்கூடிய முதலாவது உணர்வுபயம் ஆகும். கடிபட்டவர்கள் தாங்கள் இறந்துவிடுவர் என நினைக்கின்றனர். எனவே தைரியமூட்டுதல் அவசியம். உறுதியுடனும் அவசியமானவரைத் தொடர்ந்தும் தைரியமூட்டப்பட வேண்டும். பின்வரும் விடயங்கள் வலியுறுத்தப்பட வேண்டும்.
அநேகமான பாம்புகள் விஷப்பாம்புகளல்ல. விஷப் பாம்புகள்கூட கடிக்கும்போது விஷத்தைப் பாய்ச்சாதிருக்கக்கூடும். கடித்த அடையாளம் இருந்தாலும்கூட விஷம் உடம்பில் ஏறாதிருக்கக்கூடும். விஷம் ஏறியிருந்தால் மருத்துவமனைகளில் பயனுறுதியுடைய பரிகாரங்கள் உண்டு. ஆதலால் முற்றாக குணமடையூம் சாத்தியமுண்டு. கடிபட்டவரும் கடிபட்ட அவயவமும் அசையாது வைத்திருக்கப்பட வேண்டும். ஏனெனில்
கடிபட்ட அவயவமும் கடிபட்டவரும் அசைவதால் உடம்பில் ஏறியிருக்கக்கூடிய விஷம் வேகமாக உறிஞ்சப்படுகின்றது. ஆதலால் கடிபட்டவரை அசையாது வைத்திருக்கவும். அவரை நடக்க விடுவதைவிட தூக்கிச்செல்வது நன்று
அசையாதிருப்பதினால் விஷம் ஏறுவது தாமதப்படுத்தப்படுவதுடன் நோவும் குறையும். கடிபட்ட அவயவத்தை தடி வைத்துக்கட்டி அசையாதிருக்கச் செய்யலாம்
சருமத்தின் மேற்பரப்பிலுள்ள விஷத்தை அகற்றுவதற்கு கடிபட்ட இடத்தை சோப்பும் நீரும் கொண்டு கழுவலாம் அல்லது ஈரத்துணியால் துடைத்தெடுக்கலாம்.
விஷப்பாம்பு கடித்த இடத்தில் வீக்கம் ஏற்படுவது சாதாரணம். வீக்கம் ஏற்பட்டால் இறுக்கம் ஏற்படுவதைத் தடுப்பதற்கு மோதிரம், வளையல், பாதசரம், நூல் அல்லது ஆடை என்பவற்றைக்கூடிய விரைவில் கழற்றிவிடவும்.
வலி நிவாரணியாக இரண்டு பெரசிட்டமோல் மாத்திரைகளைக் கொடுக்கலாம். பாதிப்புற்றவரைக் கூடிய விரைவில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவும். கடித்த பாம்பை உயிருடனோ உயிரில்லாமலோ கடிபட்டவருடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வது நன்று. இதனால் மருத்துவர் பாம்பபை இனம்கண்டு அதற்கு ஏற்றவாறு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கலாம்.
உயிருள்ள பாம்பைக் கவனமாக கையாளுதல் அவசியம்
செய்யக்கூடாதவை சில
பாம்பு கடித்த காயத்தை வெட்டுதலோ உறிஞ்சுதலோ ஆகாது. பாம்பு விஷத்தை ஆழமாகப் பாய்ச்சுவதால் உறிஞ்சியெடுப்பதால் பயனில்லை. தெரியாதவர்கள் காயத்தை வெட்டினால் தசை நார்கள், குருதி நாளங்கள், நரம்புகள் என்பன சேதமடையலாம். இதனால் குருதி வெளியேறி நிலைமை மேலும் மோசமடையலாம்.
பாம்புக் கடிக்கான முதலுதவியின்போது கட்டுப்போடுவது சிக்கலானது. அனுபவற்றவர்கள் கட்டுப்போடுவதால் நன்மையைவிட கெடுதலே அதிகம். ஆதலால் இது சிபார்சு செய்யப்படுவதில்லை.
கொண்டிஸ் தூள் ( பொட்டாசியம் பேர்மங்கனேட் ) போன்ற இரசாயனப் பொருட்களை பாவித்தலாகாது. இவை இழையங்களை சேதப்படுத்தக்கூடும்.
எண்ணெய், “ நஸ்ன ” போன்ற திரவங்களை மூக்கின் வழியாகப் பருக்குவது ஆபத்தானது. இது சுவாசப்பைத்தொற்றை அல்லது நிரந்தரமான செவிட்டுத் தன்மையை ஏற்படுத்தலாம்.
மதுபானம் விஷத்தை விரைவாக ஏறச் செய்வதனால் மதுபானம் கொடுக்கக்கூடாது.
இளநீர், செவ்விளநீர், பழச்சாறு என்பனவற்றைப் பருக்கக்கூடாது. இவற்றில் பொட்டாசியம் அடங்கியிருப்பதால் பாம்புக் கடியையடுத்து சிறுநீரகம் சேதப்பட்டால் பிரச்சினைகள் மேலும் அதிகரிக்கும்.
அஸ்பிரின் மாத்திரை குறிப்பாக புடையன் பாம்பு கடித்ததையடுத்து கொடுக்கக்கூடாது. இது வயிற்றில் குருதிக் கசிவை ஏற்படுத்தும்.
பதற்றமடைய வேண்டாம். கடிபட்டவருக்குப் பாதகமான எதனையும் செய்ய வேண்டாம்.


