மண்டையில் பிளவு

மண்டையில் பிளவு

பின்னணித் தகவல்

மண்டையில் பிளவுடன் சோ்த்து மயக்கம் அல்லது அழுத்தம் வரலாம். பாதிப்புற்றவருக்கு தலைக் காயத்தையடுத்து சுயநினைவிழுத்தல் பற்றிய வரலாறு இல்லாதிருக்கலாம் எனினும் பாரதூரமான மண்டைப்பிளவு ஏற்பட்டிருக்கலாம்.

தலையில் அடிபட்டதையடுத்து மண்டையில் பிளவு ஏற்படலாம் அல்லது ஒருவர் உயரத்திலிருந்து கீழே விழுந்து அவரது பாதம் நிலத்தில்படும்போது அதிர்ச்சி அலைகள் முள்ளந்தண்டு ஊடாகச் சென்று மண்டையின் அடிப்பாகத்தை பாதிக்கலாம்.

எவரேனும் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்படும்போது அல்லது உயரத்திலிருந்து விழும்போது அவரது பாதங்களை நிலத்தில் ஊன்றி நின்றால் முதலுதவியைப்பற்றி அறிந்திருப்பவர் மண்டையில் பிளவு ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதுதல் வேண்டும்.

அறிகுறிகளும் அடையாளங்களும்

தலைக் காயத்தின் அல்லது விழுந்தமை பற்றிய வரலாறு
தலையில் காயம் அல்லது உராய்வு
மண்டையில் அடிபட்ட இடம் மென்மையடைதல்
வீக்கம்
காதில் அல்லது மூக்கிலிருந்து தெளிவான அல்லது குருதி படிந்த நீர்
காதுகளின் பின்னால் அல்லது மண்டைப் பிளவின்கீழ் கன்றிப்போன காயம்

குறிக்கோள்
சுவாசப்பாதையை திறந்து வைத்தல்
அவசர மருத்துவ உதவி பெறுதல்

பரிகாரம்

ஆபத்து, பதிலளித்தல், சுவாசப்பாதை, சுவாசம், குருதிச்சுற்றோட்டம் என்பவற்றை மதிப்பீடுசெய்யவும்.

பாதிப்புற்றவர் மூர்ச்சித்திருப்பினும் சுவாசிப்பவராயின் அவரைக் கவனமாக தேறும் நிலையில் இருத்தவும். பாதிப்புற்றவர் சுயநினைவூடன் இருந்தால் அவரை கீழே இருத்தி தலையையும் தோள்களையூம் மெதுவாக உயர்த்தி அவற்றிக்கு ஆதாரம் கொடுக்கவூம்.

காதிலிருந்து நீர் எதுவூம் வடிந்தால் அதனை வடியவிடும் நிலையில் பாதிப்புற்றவரை இருத்தவூம். சுத்தமான கட்டுத்துணியால் அல்லது மடித்த துணியொன்றினால் மூடவும். இதனை ஒரு பெண்டேஜினால் கட்டிவிடவும்.காதை அடைக்க வேண்டாம்.

மண்டையிலிருந்து குருதி வடிந்தால் அதனைக் கட்டுப்படுத்தவும்.
மருத்துவ உதவி கோரவும்
சுயநினைவின் மட்டத்தையும் சுவாசத்தையும் நாடித்துடிப்பையும் கண்காணிக்கவும். பேனையும் கடதாசியும் இருந்தால் நீங்கள் அவதானித்தவற்றை ஒவ்வொரு பத்து நிமிடங்களுககு ஒரு முறை எழுதி வைக்கவும். அல்லது மருத்துவ உதவி வரும் வரை கண்காணிக்கவும்.

   
 
   
 
   
 
   
 
   
 
   
 
   
 
   
 
   
 
   
 
   
 
   
   

முதலுதவி பற்றிய அறிவூடையவர் தலையில் காயமுற்றவரைக் கையாளும்போது நினைவிற் கொள்ள வேண்டிய மற்றுமொறு அம்சம் இதுவாகும். சுயநினைவிழக்கச செய்யும் அளவுக்கு பாரதூரமான தலைக் காயங்கள் எவையும் கழுத்தில் காயத்தை ஏற்படுத்தலாம். தலையில் காயமுற்றவரைக் கையாளும்போது தலையினதும் கழுத்தினதும் அசைவுகளை குறைவாகவே வைத்திருக்க வேண்டும் என்பதனை நினைவிற்கொள்ளவும். அசைவைத் தவிர்க்க முடியாதவிடத்து தலையையும் கழுத்தையும் நேராக வைத்து ஆதாரம் கொடுக்கவும்.

தனியாக இருப்பின்

அம்பியுலன்ஸ் கிடைக்காவிட்டால் பாதிப்புற்றவரை தலைக் காயத்திற்கான சரியான நிலையில் அல்லது தேறும் நிலையில் வைத்து ஏற்றிச் செல்வதற்கு வசதியான ஒரு போக்குவரத்துச் சாதனத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

முச்சக்கர வண்டியை பயன்படுத்த வேண்டாம்.