எரிகாயங்களும் வெந்த காயங்களும்



விடியோ 21 - எரிகாயங்களுக்கான உள்ளானவரை அங்கிருந்து அப்புறப்படுத்தவும்

 

எரிகாயங்கள் அறிகுறிகளும் அடையாளங்களும்

பின்னணித் தகவல்

பாதிப்புற்றவருக்கு இருக்கும் வலி காரணமாக எரி காயங்களைக் கையாள்வது மிகவும் பிரச்சினைக்குரியது என்பது முதலுதவி தெரிந்தவருக்குத் தென்படும்.

எரிகாயங்களும் வெந்த காயங்களும் பொதுவாக நெருப்பு போன்ற உலர்ந்த சூட்டினாலும் நீராவி போன்ற ஈரமான சூட்டினாலும் ஏற்படுத்தப்படுகின்றன. அமிலங்களும் இழையங்களில் படும்போது வெப்பத்தை விடுவிப்பதன்மூலம் எரிகாயங்களை ஏற்படுத்தும். உராய்வூ,மின்சாரம், அடுப்புகள், கடுங்குளிர் என்பனவும் எரிகாயங்களை உண்டு பண்ணும் ஏனைய காரணிகளாகும்.

 

அறிகுறிகளும் அடையாளங்களும்

அதிர்ச்சியைப் போன்றதே

எல்லா எரிகாயங்களும் வெந்த காயங்களும் மூன்று ஆழங்களைக் கொண்டுள்ளதாக விவரிக்கப்படுகின்றன.

மேலெழுந்தவாரியானது
சிவந்துபோதல்
வலியும் மென்மைத் தன்மையும்
வீக்கம்

ஓரளவு தடிப்பு
சிவத்தல்
வலியும் மென்மைத் தன்மையும்
வீக்கம்
ஈரமான தோற்றம்
கொப்பளம்

முழுமையான தடிப்பு
வேளிறிய ஈரத் தன்மை
கருகிய இழையம்

குறிப்பு : முழுமையான தடிப்பத்தைச் சுற்றியுள்ள பாகம் ஓரளவு தடிப்பத்தையும் மேலெழுந்த வாரியான எரிகாயங்களையும் கொண்டிருக்கலாம்.

முதலுதவி பற்றி அறிந்திருக்கும் ஒருவர் எரிகாயங்களின் ஆழத்தை மனதிற்கொள்ள வேண்டியது முக்கியம் எனினும் காயத்தின் ஆழத்தைவிட காயம் எவ்வளவு பாரதூரமானதென்பதனை மனதிற்கொள்வது அதைவிட முக்கியமாகும். உடலின் 30% வீதத்திற்கு பரவியிருக்கும் மேலெழுந்த வாரியான காயமுற்ற ஒருவர் 15% வீதத்திற்குப் பரவியிருக்கும் ஆழமான எரிகாயத்தை அடைந்தவரைவிட பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். வழிகாட்டியொன்றாக 2.5 செ.மீ. அளவிலான மேலெழுந்தவாரியான அல்லது ஓரளவு மொத்தமான காயத்தை அடைந்த ஒருவர் மருத்துவ உதவி பெறுதல் வேண்டும். அந்த அளவைவிடப் பெரிய காயத்தை அடைந்த ஒருவர் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெறவேண்டும். இதற்கு காரணம் இழையங்கள் சிதைந்து போயிருப்பதும் அதிர்ச்சி சம்பந்தப்பட்டிருப்பதும் மட்டுமல்ல, எரிகாயங்களில் கிருமிகள் பரவும் ஆபத்தும் இருப்பதனாலாகும்.

சிறிய எரிகாயங்களும் வெந்த காயங்களும்

குறிக்கோள்
எரிவை நிறுத்துதல்

வலியையும் வீக்கத்தையும் தணித்தல்
கிருமி தொற்றக்கூடிய அபாயத்தை குறைத்தல்

பரிகாரம்
நீங்கள் உங்கள் பூர்வாங்க மதிப்பீட்டை முடித்துக்கொண்டதும் ஓடும் குளிர்நீரைக் கொண்டு காயத்தில் வலி குறையும்வரை குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது குளிரச் செய்யவும். (ஓடும் குளிர்நீர் இல்லாவிட்டால் குளிர்மையான கெடுதலற்ற எந்தவொரு திரவமும் பரவாயில்லை)

காயம் ஏற்பட்ட இடத்திலுள்ள மோதிரங்கள், கைக்கடிகாரம் என்பவற்றை மெதுவாக அகற்றவும்

( கொதிக்கும் உலோகத்தின் சூட்டிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்)

காயப்பட்ட இடத்தை சுத்தமான கட்டுத்துணியால் மூடவும். பொலித்தீன் பையொன்றை தற்காலிகமாக பயன்படுத்தலாம். சுத்தமான பஞ்சி கலவாத தலையணை உறையும் எரிகாயத்தை அல்லது வெந்த புண்ணை மூடுவதற்கு பொருத்தமானதாயிருக்கும்.

பஞ்சுத்தன்மையுள்ள அல்லது ஒட்டும் தன்மையுள்ள பொருளைப் பயன்படுத்த வேண்டாம்.

எவையேனும் கொப்புளங்களை உடைக்க வேண்டாம்

காயத்தில் ஏதேனும் கீறிமை, தைலத்தை, கொழுப்பை அல்லது எண்ணெய்யைத் தேய்க்க வேண்டாம்
காயப்பட்ட இடத்தை தொடவேண்டாம்

பாரதூரமான எரிகாயங்கள்

பாரதூரமான எரிகாயங்களும் வெந்த காயங்களும் முதலுதவியாளருக்கு ஒரு பெரும் பிரச்சினையாகும். சம்பவம் இடம்பெற்றுள்ள இடத்தின் சூழ்நிலைகள் காயத்தின் ஆழத்தையும் அளவையும் அறிவதற்கு சில துப்புகளைத் தரலாம்.

குறிக்கோள்
எரிவையும் வீக்கத்தையூம் தணித்தல்
தேவையாயின் மீளுயிர்ப்பித்தல் அளித்தல்
சம்பவத்தின்போது ஏற்பட்ட ஏனைய காயங்களுக்கு சிகிச்சையளித்தல்
கிருமி தொற்றும் ஆபத்தைக் குறைத்தல்
மருத்துவ உதவி பெறுதல்

வாயிலும் தொண்டையிலும் எரிகாயங்கள்

பின்னணித் தகவல்
இந்தப் பகுதிகளில் ஏற்படும் எரிகாயங்களும் வெந்த காயங்களும் உயிருக்கே ஆபத்தாக அமையலாம். தொண்டையிலுளள மென்மையான இழையங்களில் துரிதமாக வீக்கம் ஏற்பட்டு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம்.

அறிகுறிகளும் அடையாளங்களும்
வாயையும் மூக்கையும் சுற்றி கரி படிதல்
மூக்கிலுள்ள மயிர்கள் எரிந்திருக்கும்
வாயிலும் மூக்கிலும் எரிகாயங்கள்
கதைப்பதில் சிரமம்
சுவாசிப்பதில் சிரமம்

குறிக்கோள்

அவசர மருத்துவ உதவி பெறுதல்
சுவாசப்பாதையை பேணுதல்

பரிகாரம்
ஆபத்து, பதிலளித்தல், சுவாப்பாதை, சுவாசம், குருதிச் சுற்றோட்டம் என்பவற்றை மதிப்பீடு செய்யவும்.

போக்குவரத்துக்கு ஒழுங்குசெய்து பாதிப்புற்றவரை கூடியவிரைவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும்

அவருக்கு சுவாசப்பாதையில் எரிகாயம் இருப்பதாக கூறவும்

பாதிப்புற்றவருக்கு சுவாசிப்பதற்கு போதியளவு காற்றோட்டம் இருப்பதை உறுதிப்படுத்தவும்.

கழுத்தைச் சுற்றி இறுக்கமாகவுள்ள ஆடைகளை தளர்த்திவிடவும்.
பாதிப்புற்றவர் சுயநினைவுடனிருந்தால் குளிர்நீரை சிறிதுசிறிதாக பருகக் கொடுக்கவும்
சுயநினைவை அழிக்கும் அறிகுறிகள் தென்பட்டால் அவரைத் தேறும் நிலையில் வைக்கவும்

மீளுயிர்ப்பித்தலுக்கு தயாராயிருக்கவும்.