சிறுவர்களுக்கான இருதய நுரையீரல் மீளுயிர்ப்பித்தல் (CPR)
VIDEO 11 - HOW TO DO CPR, CHEST PUMPS AND RESCUE BREATHS ON A BABY
விடியோ 11 - குழந்தையொன்றுக்கு CPR செய்வது எப்படி, மார்பழுத்தத்துடன் மீளுயிர்ப்புச் செய்வது எப்படி
VIDEO 12 - HOW TO DO CPR, CHEST PUMPS AND RESCUE BREATHS ON A CHILD
விடியோ 12 - பிள்ளையொன்றுக்கு CPR செய்வது எப்படி, மார்பழுத்தத்துடன் மீளுயிர்ப்புச் செய்வது எப்படி
பின்னணித் தகவல்
விபத்தொன்றின் அல்லது சடுதியான சுகவீனத்தின் விளைவாக ஒவ்வோராண்டும் பல சிறுவர்களுக்கு மீளுயிர்ப்பித்தல் அவசியப்படுகின்றது. இருப்பினும் இதனால் ஏதும் ஆபத்து வரலாமென உயிர்க்காப்பாளர்கள் அஞ்சுவதனால் இதனைப் பெற முடியாமல் போகின்றனர். இவ்வாறான அச்சுறுத்தல்கள் இனங்காணப்படவில்லை. ஏதும் செய்யாமலிருப்பதை விடவும் வளர்ந்தோருக்கான முறையை குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் பயன்படுத்துவது சிறந்தது.
சிறிய திருத்தங்களுடனான கீழ்வரும் வளர்ந்தோருக்கான முறையானது சிறுவர்களுக்கும் பொருந்தும்.
வளர்ந்தோருக்கான CPR இனை ஆரம்பிக்கும் முன் ஆரம்ப ஐந்து மீளுயிரச்சுவாசங்களை வழங்கவும். ( ஒரு வயதுக்குக் குறைந்த குழந்தைகளுக்கு வாயையும் மூக்கையும் அடைத்து மெதுவாக ஊதவும்.)
இருதயத்தின் ஆழத்தின் சுமார் மூன்றில் ஒன்று வரை அழுத்தவும். ஒரு வயதுக்குக் குறைந்த குழந்தைகளுக்கு இரண்டு விரல்களைப் பயன்படுத்தவும். ஒரு வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களில் சரியான ஆழத்தில் மார்பழுத்தத்தை பிரயோகிப்பதற்கு ஒன்று அல்லது இரண்டு கைகளைப் பயன்படுத்தவும்.
சிறுவர்களுக்கான CPR
ஆபத்தை பரீட்சித்த பின் நோயாளியின் முகம் மேல் நோக்கி மல்லாந்தவாறு உள்ளதா என உறுதி செய்துகொள்ளவும்.
பிரதிபலிப்பு
சுவாசப்பாதை என்பவற்றைப் பரீட்சிக்கவும்.
நோயாளிக்கு சாதாரண சுவாசம் இல்லை
யாரிடமாவது அம்புலன்ஸ் வண்டியை அழைப்பதற்கு அல்லது வைத்திய உதவியை நாடத்தேவையான போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு உத்தரவிடவும். நீங்கள் மட்டும் தனியாக இருந்தால் இவற்றை நீங்களே செய்ய வேண்டிய நிலை ஏற்படும். உங்களுக்கு நோயாளியை தனியே விட்டுச் செல்ல வேண்டி நேரிடலாம்.
மீளுயிர்ச்சுவாசம் : சிறுவர்களுக்கு (திறந்த சுவாசப்பாதையை மேற்கொள்ளவும்)
உங்கள் கை நோயாளியின் நெற்றியில் இருக்குமாறும் உங்கள் பெருவிரலாலும் சுட்டு விரலாலும் நோயாளியின் மூக்கின் மென்மையான பாகத்தை அமத்திப் பிடிக்கவும்
சீரான திறந்த சுவாசப் பாதையுடன் நோயாளியின் வாயைத் திறக்கவும், ஆனால் நாடியை உயர்த்தி வைத்துக் கொள்ளவும்.
சாதாரண சுவாசம் ஒன்றை எடுத்து உங்கள் உதட்டால் நோயாளியின் வாய் நன்று மூடியிருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
நோயாளியின் நெஞ்சுப் பகுதி உயர்வதை அவதானிப்பதுடன் உயரும் வரை வாயினுள் ஊதவும் சாதாரண சுவாசத்தின்போது போன்று நெஞ்சுப் பகுதி மேலெலும்புவதற்கு அன்னளவாக ஒரு செக்கன் வரை எடுக்கவும். இதுவே பலனுள்ள உயிர்ச்சுவாசமாகும்.
திறந்த சுவாசப்பாதையை சீர்செய்யவும், நோயாளியின் வாயிலிருந்து உங்கள் வாயை எடுக்கவும்.. அத்துடன் காற்றுவெளி வருவதன் மூலம் நோயாளியின் நெஞ்சுப்பகுதி கீழாக அமைவதையூம் அவதானிக்கவும்.
மீண்டும் ஒரு சுவாசத்தை எடுத்து நோயாளியின் வாயினுள் ஊதவும்.. பலனுள்ள ஐந்து மீளுயிர்ச்சுவாசத்தை வழங்குவதற்கு இந்த ஒழுங்கு முறையை மீண்டும் மீண்டும் செய்யவும்.
மார்பழுத்தம்
நோயாளியின் அருகில் முழந்தாலிடவும்.
ஒரு உள்ளங்கையின் அடிப்பகுதியை நோயாளியின் நெஞ்சின் நடுப்பகுதியில் வைக்கவும்.
அழுத்தமானது நோயாளியின் விலா எண்பின் மீது வழங்கப்படுவதில்லை என்பதை உறுதிசெய்துகொள்ளவூம். வயிற்றின் மேல் பகுதிக்கு அல்லது மார்பெண்பின் கீழ் பகுதிக்கு எந்த விதமான அழுத்தங்களையூம் பிரயோகிக்க வேணடாம்.
நோயாளிக்கு நேர் பக்கவாட்டில் முழந்தாலிட்டு அமரவும். உங்கள் கைகள் வளையாமல் நேராக மார்பெண்பு கீழ் நோக்கி அசையும் வன்னம் மார்பின் மூன்றில் ஒரு பகுதி ஆழம் வரை அழுத்தவும்.
30 மார்பழுத்தம் கொடுக்கவும்
குறிப்பு
ஓவ்வொரு மார்பழுத்தத்தின் பின்னும் உங்கள் கைக்கும் நோயாளியின் நெஞ்சுக்கும் தொடுகை அற்றுப்போகா வன்னம் முழு அழுத்தத்தையூம் நெஞ்சிலிருந்து விடுவிக்கவும். (ஒவ்வெரு அழுத்தத்தின் பின்னும் நோயாளியின் நெஞ்சுப்பகுதியை முற்றாக மீள் நிலையை அடைய விடவும்.) கண்டிப்பாக அழுத்தத்தின் போதும் விடுவிப்பின் போதும் ஒரே அளவான நேரத்தை எடுக்கவும்.
மார்பழுத்தத்துடனான மீளுயிர்ச்சுவாசம்
30 மார்பழுத்தங்கள், 02 உயிர்ச்சுவாசங்கள்
நோயாளி சாதாரணமாக சுவாசிக்க ஆரம்பித்த பின்னர் மட்டுமே நீங்கள் மீள் பரிசீலனைக்காக இச்யெற்பாட்டை நிறுத்தலாம், மற்றும்படி மீளுயிர்ப்பித்தல் செயற்பாட்டில் தடங்கலை ஏற்படுத்தாதீர்கள்.
நீங்கள் வழங்கிய உயிர்ச்சுவாசத்தால் நோயாளியின் நெஞ்சுப்பகுதி மேலெலும்பாவிடில் அடுத்த முயற்சிக்கு முன்
தலையைப் பின்னோக்கி இழுத்து நாடியினால் உயர்த்தி சீரான காற்றுப்பாதையை உருவாக்கியிருப்பது சரியா என மீள் பரிசீலிக்கவும்.
மார்பழுத்தத்திற்குத் திரும்புமுன் இரண்டு முறைக்கு மேல மீளுயிரச்சுவாசம் வழங்க முயற்சிக்க வேண்டாம்.
ஓன்றுக்கு மேற்பட்ட முதலுதவியாளர்கள் இருந்தால் ஏற்படும் களைப்பிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கு மற்றையவர் ஒவ்வொரு 02 நிமிடத்திற்கும் CPR இனை மாரி மாரிச்செய்தல் வேண்டும். மற்றைய முதலுதவியாளருக்கு ஒப்படைக்க எடுக்கும் காலத்தைக் குறைத்துக் கொள்ளல் கட்டாயம்.
வாயால் மூக்கிற்கு சுவாசம் வழங்கல்
வாயால் மூக்கிற்கு சுவாசம் வழங்குவது என்பது வாய்க்கு வாய் பலனுள்ள உயிர்ச்சுவாசம் வழங்குவதற்குப் பதிலீடாகும். இது நோயாளியின் வாய் அளவுக்கதிகம் காயப்பட்டிருந்தால் அல்லது திறக்க முடியாவிட்டால் கருத்திற் கொள்ளப்படும். நோயாளிக்கு நீரில் அல்லது வாய்க்கு வாய் அடைப்பது சாத்தியமற்ற இடத்தில் உதவுகிறார்.
சாதாரணமாக தலையைப் பின்னால் சாய்த்து நாடியை உயர்த்தும் முறையைப் பின்பற்றவும்.
சாதாரணமாக மூச்சை எடுங்கள்
நோயளியின்வாயை மூடவும்
உங்கள் உதடுகளால் நோயாளியின் மூக்கை மூடிக்கொள்ளவும். சரியாக மூக்கினுள் ஊதவும், அத்தோடு சாதாரணமாக நெஞ்சு மேலெலுவது போன்று மேலுயரச் செய்ய சுமார் ஒரு செக்கன் எடுக்கவும். இதுவே பயனுள்ள மீளுயிர்ச்சுவாசம்.
குழந்தைகளுக்கான CPR
குழந்தைகளுக்கான CPR(ஒரு வயதுக்குக் கீழ்ப்பட்ட
ஆபத்தை பரீட்சித்த பின் நோயாளியின் முகம் மேல் நோக்கி மல்லாந்தவாறு உள்ளதா என உறுதி செய்துகொள்ளவும்.
பிரதிபலிப்பு
சுவாசப்பாதை என்பவற்றைப் பரீட்சிக்கவும்.
சுவாசம் என்பவற்றைப் பரீட்சிக்கவும்
நோயாளிக்கு சாதாரண சுவாசம் இல்லை
யாரிடமாவது அம்புலன்ஸ் வண்டியை அழைப்பதற்கு அல்லது வைத்திய உதவியை நாடத்தேவையான போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு உத்தரவிடவும். நீங்கள் மட்டும் தனியாக இருந்தால் CPR வழங்கியபடி நீங்களே குழந்தையை வைத்திய உதவிக்குக் கொண்டுச் செல்ல வேண்டிவரும்.
குழந்தைகளுக்கான மீளுயிர்ப்புச் சுவாசம்
சாதாரண சுவாசம் ஒன்றை எடுக்கவும், உங்கள் உதடுகளால் நோயாளியின் வாயையும் உதடுகளையும் நன்கு மூடியூள்ளீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
சரியாக மூக்கினுள் ஊதவும் அத்தோடு சாதாரணமாக நெஞ்சு மேலெலுவது போன்று மேலுயரச்செய்ய சுமார் ஒரு செக்கன் எடுக்கவும். இதுவே பயனுள்ள மீளுயிர்ச்சுவாசம் ஆகும்.
தலையைப் பின்னால் சாய்த்தும் நாடியை உயர்த்தியும் வைத்திருக்கவும். அத்துடன் காற்று வெளி வருவதன் மூலம் நோயாளியின நெஞ்சுப்பகுதி கீழாக அமைவதையும் அவதானிக்கவும்.
மீண்டும் ஒரு சுவாசத்தை எடுத்து நோயாளியின் வாய்க்கும் மூக்கிற்கும் ஊதவும். பலனுள்ள ஐந்து மீளுயிர்ச்சுவாசங்களை வழங்குவதற்கு இந்த ஒழுங்கு முறையை மீண்டும் மீண்டும் செய்யவும்.
மார்பழுத்தம்
ஒரு கையின் இரண்டு விரல்களை நோயாளியின் நெஞ்சின் நடுப்பகுதியில் வைக்கவும்.
வயிற்றின் மேல்பகுதிக்கு அல்லது மார்பெண்பின் கீழ் பகுதிக்கு எந்த விதமான அழுத்தங்களையும் பிரயோகிக்க வேண்டாம்.
விலா எண்பு கீழ் நோக்கி அசையூம் வன்னம் மார்பின் மூன்றில் ஒரு பகுதி ஆழம் வரை அழுத்தவும்
30 மார்பழுத்தம் கொடுக்கவும்
குறிப்பு
ஓவ்வொரு மார்பழுத்தத்தின் பின்னும் உங்கள் கைக்கும் நோயாளியின் நெஞ்சுக்கும் தொடுகை அற்றுப்போகா வன்னம் முழு அழுத்தத்தையும் நெஞ்சிலிருந்து விடுவிக்கவஞம். (ஒவ்வெரு அழுத்தத்தின் பின்னும் நோயாளியின் நெஞ்சுப் பகுதியை முற்றாக மீள் நிலையை அடைய விடவும்.) கண்டிப்பாக அழுத்தத்தின் போதும் விடுவிப்பின் போதும் ஒரே அளவான நேரத்தை எடுக்கவும்..
மார்பழுத்தத்துடனான மீளுயிர்ச்சுவாசம்
30 மார்பழுத்தங்கள், 02 உயிர்ச்சுவாசங்கள்
நோயாளி சாதாரணமாக சுவாசிக்க ஆரம்பித்த பின்னர் மட்டுமே நீங்கள் மீள் பரிசீலனைக்காக இச்யெற்பாட்டை நிறுத்தலாம், மற்றும்படி மீளுயிர்ப்பித்தல் செயற்பாட்டில் தடங்கலை ஏற்படுத்தாதீர்கள்.
நீங்கள் வழங்கிய உயிர்ச்சுவாசத்தால் நோயாளியின் நெஞ்சுப்பகுதி மேலெலும்பாவிடில் அடுத்த முயற்சிக்கு முன்
நோயாளியின் வாயினுள் கண்ணுக்குப் புலப்படக்கூடிய பிறபொருள் ஏதும் உண்டா எனப் பார்க்கவூம்.
தலையைப் பின்னோக்கி இழுத்து நாடியினால் உயர்த்தி சீரான காற்றுப்பாதையை உருவாக்கியிருப்பது சரியா என மீள் பரிசீலிக்கவும்.
மார்பழுத்தத்திற்குத் திரும்புமுன் இரண்டு முறைக்கு மேல் மீளுயிர்ச்சுவாசம் வழங்க முயற்சிக்க வேண்டாம்.
ஓன்றுக்கு மேற்பட்ட முதலுதவியாளர்கள் இருந்தால் ஏற்படும் களைப்பிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கு மற்றையவர் ஒவ்வொரு 02 நிமிடத்திற்கும் CPR இனை மாரி மாரிச்செய்தல் வேண்டும். மற்றைய முதலுதவியாளருக்கு ஒப்படைக்க எடுக்கும் காலத்தைக் குறைத்துக் கொள்ளல் கட்டாயம்.
![]() |
||||
![]() |
||||
![]() |
||||
![]() |
||||
![]() |
||||
![]() |
||||
![]() |
||||
சிறுவர் மற்றும் குழந்தைகளுக்கான அடிப்படை உயிர் காப்பு
உணர்வில்லை
உதவி கோரி சப்தமிடல்
திறந்த சுவாசப்பாதை
சீரான சுவாசமின்மை
உதவிக்கு அனுப்புதல் (அல்லது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லல்)
5 மீளுயிர்ச்சுவாசம்
30 மார்பழுத்தம்
02 மீளுயிர்ச்சுவாசம்
30 மார்பழுத்தம்









