சுவாசத் தடைப்படல்
விடியோ 13 -சுவாசத் தடைப்படலலை கவனிக்கவும் பின்னர் அவரை இருமுவதற்கு முயற்சிக்கவும
விடியோ 14 - பின்புறமாக தட்டி அவரை இருமாறு செய்யவும்
>
விடியோ 15 - மார்பழுத்தத்தை கொடுக்கவும
விடியோ 16 - மார்பழுத்தை வழங்கும்போது கைகள் எவ்வாறு இருக்க வேண்டும்
விடியோ 17 - மார்பழுத்தத்தை வழங்கும்போது செயற்படுவது எப்படி
விடியோ 18 - தனிமையில் இருக்கும்போது மார்பழுத்தத்தை வழங்குவது எவ்வாறு
விடியோ 19 - தனிமையில் இருக்கும்போது மார்பழுத்தத்தை வழங்குவது எவ்வாறு
சுவாச தடைப்படலைக் (மூச்சுத் திணறலைக்) கண்டறிதலும்
பரிகாரம் செய்தலும்
பின்னணித் தகவல்
பெரும் தொகையான மக்கள் வாயில் வைத்திருக்கும் உணவு அல்லது வேறு பொருட்கள் தொண்டையில் சிக்குவதால் மூச்சுத் திணறி இறப்பதுண்டு. மூச்சுத் திணறும் சம்பவங்கள் பாரதூரமானவையல்ல எனினும் இப்பாதகத்திற்கு உட்பட்டவருக்கும் அவரைப் பராமரிப்பவர்களுக்கும் இவை அச்சம் தரக்கூடியவை. தொண்டையின் பின்புறத்தில் அடைத்துக்கொள்ளும் புறப் பொருள் ஒன்று சுவாசப்பாதையை அடைக்கக்கூடும் அல்லது தசை இறுக்கத்தை ஏற்படுத்தும். சுவாசப்பாதை ஓரளவு மட்டுமே அடைத்திருந்தால் பாதிப்பிற்குட்பட்டவர் தாமே அதனை எடுத்துவிடலாம். முற்றாக அடைத்துக்கொண்டால் அவரால் கதைக்கவோ சுவாசிக்கவோ இருமவோ முடியாது. அத்துடன் உணர்விழந்து விடுவார். மீளுயிர்ப்புச் சுவாசத்தையும் மார்பழுத்தத்தையும் வழங்கத் தயாராயிருக்கவும். தொண்டைத் தசைகள் தளர்ந்து மீளுயிர்ப்புச் சுவாசத்திற்கு சுவாசப் பாதையைப் போதுமான அளவு திறந்துவிடும். கீழ்வரும் அட்டவணையில் சாதாரணமான, ஆபத்தான சுவாசத் தடைப்படலுக்கான வேறுபாடு காட்டப்பட்டுள்ளது. உணர்வுள்ள நோயாளி எனின் சுவாசப்பாதை தடைப்பட்டிருக்கின்றதா எனக்கேட்கவும்.
சுவாசத் தடைப்படலுக்கான பொதுவான அறிகுறிகள்
| உணவு உட்கொள்ளும்போது தொண்டை அடைத்தல் நோயாளி கழுத்துப் பகுதியை பிடித்துக்கொண்டிருத்தல் |
|
| சாதாரணமான சுவாசப்பாதை தடைப்படல் | பாரிய சுவாசப்பாதை தடைப்படல் |
உங்களுக்குத் தொண்டையில் ஏதும் அடைபட்டுள்ளதா எனும் கேள்விக்கு பிரதிபலிப்ப நோயாளி ஆம் என்று பதிலளித்தலுடன் பேசுவார் வேறு அறிகுறிகள்
|
உங்களுக்குத் தொண்டையில் ஏதும் அடைபட்டுள்ளதா எனும் கேள்விக்கு பிரதிபலிப்பு வேறு அறிகுறிகள் |
வளர்ந்தோர் சுவாசத்தடைப்படலுக்கான படிமுறைகள்
(ஒரு வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் இப்படிமுறை பொருந்தும்)
நோயாளி மென்மையான பொருள் மூலம் ஏற்பட்ட சுவாசத்தடைப்படலுக்கான அறிகுறிகளைக் காட்டினால்:
தொடர்ந்தும் இருமும்படி உற்சாகப்படுத்தவும். அதற்கு மேற்கொண்டு ஏதும் செய்யவேண்டாம்
நோயாளி பாரிய சுவாசத்தடைப்படலுக்கான அறிகுறிகளைக் காட்டுவதுடன் சுயநினைவு இருந்தால் ஐந்து முறை நன்றாக முதுகில் தட்டவும்.
சற்றுப்பின்புறமாக நோயாளியின் பக்கவாட்டில் நிற்கவும்.
நோயாளியின் நெஞ்சிக்கு உங்களது ஒரு கையால் ஆதரவாகப் பிடித்துக்கொண்டு நன்றாக நோயாளியை முன்னோக்கிக் குனியச் செய்யவும். இதனால் மேலும் தடைப்பட்ட பொருளானது கீழ் நோக்கி செல்வதைத் தடுக்கும்.
உங்களது மற்றக் கையின் உதவியுடன் உள்ளங்கையின் அடிப்பகுதியால் நோயாளியின் முதுகில் தோல் பட்டையில் நன்றாக 5 தடவை தட்டவும்.
ஒவ்வொரு தட்டுதலின் பின்பும் தடைப்பட்ட பொருள் வெளிவந்துவிட்டதா எனப் பார்க்கவும்.
இதன் நோக்கம் தடைப்பட்டுள்ள பிர பொருளை அகற்றுதலே அன்றி ஐந்து முறை தட்டுதல் அல்ல.
ஐந்து முறை முதுகை தட்டியும் தொண்டையில் அடைத்த பொருள் வெளியே வராவிட்டால் ஐந்து முறை வயிற்றழுத்தம் கொடுக்கவும்.
நோயாளியின் பின்புறத்தில் நிற்கவும், இரண்டு கைகளையும் நோயாளியின் வயிற்றின் மேற்பகுதியில் சுற்றிப் பிடிக்கவும்.
நோயாளியயை நன்கு முன்னோக்கி வளைக்கவும்.
நன்கு விரல்களைப் பிடித்துக்கொண்டு உங்கள் ஒரு கையை தொப்புளுக்கு கீழும் மார்பெண்பிற்கு நடுவிலும் வைக்கவும்.
இந்தக் கையை உங்களது மற்றக் கையால் பற்றிப் பிடித்துக்கொண்டு உள்நோக்கியும் மேல் நோக்கியும் அழுத்தவும்.
மேற்படி முறையை ஐந்து தடவை வரை மேற்கொள்ளவும்.
நோயாளி உணர்வற்றுப் போனால்:
கவனமாக நோயாளியை தரையில் கிடத்தவும்
உடனடியாக அம்புலன்ஸ் வண்டியை அழைக்கவும். அல்லது (மருத்துவ உதவியை நாடத் தேவையான போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளவும்.
மார்பழுத்தத்தை தொடரரவும்.
பின்னணிக் காரணிகள்
சுவாசத்தடைப்படலுக்கான சிறந்த முதலுதவியை மேற்கொள்ளல், பிற பொருட்களின் சிறுதுண்டுகள் சுவாசப் பாதையின் மேற்பகுதியில் அல்லது கீழ் பகுதியில் இருந்து பின்னர் இடையூறுகளை ஏற்படுத்தலாம். இடைவிடாத இருமல், விழுங்குவதற்கு சிரமப்படல் அல்லது தொண்டையில் பிற பொருள் இருப்பது போன்ற உணர்வு காணப்பட்டால் வைத்திய உதவியை நாடவும்.
வயிற்றழுத்தமானது உற்குருதிப் பெருக்கை ஏற்படுத்தலாம். எனவே வயிற்றழுத்தம் கொடுக்கப்பட்ட எல்லா நோயாளிகளையும் மருத்துவப் பரிசீலனைக்கு உற்படுத்தல் அவசியமாகும்.
இதன் மூலம் தடை அகலாவிட்டால் முதுகில் தட்டுதலையூம் மார்பில் அழுத்துவதையும் மூன்று தடைவ திரும்ப மேற்கொள்ளவும். தடை அகலாவிட்டால் உதவியை நாடவும் அல்லது குழந்தையை மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லவும்.
ஒரு வயதுக்குக் குறைந்த குழந்தைக்கு எந்தவொரு நேரத்திலும் அடிவயிற்றில் அழுத்தம் கொடுக்கவேண்டாம். (உணர்விழந்திருந்தாலும் சரிஇ இல்லாவிடினும் சரி.)
இறுதியாக மூச்சுத் திணறலைக் கையாளும்போது தடை உடனடியாக அகற்றப்படாவிட்டால் அவசரமாக உதவி கோர மறுக்கவேண்டாம். ஓர் அசம்பாவிதத்தைக் காண்பதைவிட சுகாதாரமான மருத்துவ உதவி வந்து வீறிட்டழும் குழந்தையைக் காண்பது மேல்.













