காய்ச்சல் வலிப்பு
காய்ச்சல் வலிப்பு குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் ஏற்படலாம். குழந்தைகளாலும் சிறுவர்களாலும் அவர்களது உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாது. உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும் நோய்களும் சுகவீனங்களும் காய்ச்சல் வலிப்பைத் தூண்டிவிடலாம்.
குறிக்கோள்
உடல் வெப்பத்தை தணித்தல்
அவசர மருத்துவ உதவி கோரல்
பரிகாரம்
பாதிப்புற்றவரின் ஆடைகளை கழற்றிவிடவும்
பிள்ளையை குளிரடைய செய்வதற்கு சுத்தமான குளிராக காற்று வரவிடவும்
சுவாசப்பாதையை பாதுகாப்பற்கு முடியுமானால் பிள்ளையை பக்கவாட்டில் இருத்தவும்
வலிப்பின்போது பிள்ளையை காயத்திலிருந்து பாதுகாப்பதற்கு எவையேனும் பொருட்களை எடுத்துவிடவும். குறிப்பாக தலையைப் பாதுகாப்பதற்கு விசேட கவனம் செலுத்தவும்.
உடல் குளிரடைவதற்கு ஏதுவாக இளம் சுடுநீரால் தலையிலிருந்தும் கழுத்தின் பின்புறத்திலிருந்தும் துவட்டவும்.
வெப்ப நிலை சாதாரண நிலைக்கு வரும்வரை ( 98.4 F-36-37 C ) தொடர்ந்து குளிரடையச் செய்யவும்.
பிள்ளையை அளவுக்கதிகமாக குளிரடையச் செய்யாதிருக்கவும்
அவசர மருத்துவ உதவி கோரவும்
மருத்துவ உதவி கிடைக்கும்வரை சுவாசப் பாதையையும் சுவாசத்தையும் அடிக்கடி அவதானிக்கவும்.


