வளர்ந்தோருக்கான இருதய நுரையீரல் மீள் உயிர்பித்தற் செயற்பாடு (CPR)

வீடியோ 6 - காயமடைந்தவர்கள் மூச்கெடுக்காமை


வீடியோ 7 - காயமடைந்தவர்கள் மூச்கெடுக்காமை மற்றும் மீளுயிர்ச்சுவாசம்




விடியோ 8 - CPR மற்றும் மார்பழுத்தம் மற்றும் மீளுயிர்ச்சுவாசம்


விடியோ 9 - CPR எவ்வாறு செய்வது, மார்பழுத்தம் மற்றும் மீளுயிர்ப்பு சுவாசம்




விடியோ 10 - CPR எவ்வாறு செய்வது, மார்பழுத்தம் மற்றும் மீளுயிர்ப்பு சுவாசம்

பின்னணிக் காரணிகள்

சீரான முறையில் சுவாசமற்ற ஒரு நோயாளியை கையாளும்போது கீழ் குறிப்பிட்டுள்ள இலகுவான சில படிமுறைகளை மேற்கொள்வதன்மூலம் உயிரைக் காப்பாற்றலாம்.

சீரற்ற சுவாசம் ( மூச்சு இழுத்தல்)

தீடீரென இருதயம் செயலற்றுப் போய் ஒரு சில விநாடிகளுக்குப்பின் இவ்வாறான சீரற்ற மூச்சு இழுவை ஏற்படும். இவ்வாறான அறிகுறிகள் காணப்படல் உடனடியாக இருதய நுரையீரல் மீளுயிர்ப்பித்தற் செயற்பாட்டை ஆரம்பிப்பதற்கான அறிகுறியாகும்.

நோய் அறிகுறிகள்
· மயக்க நிலை
· சீரான சுவாசித்தலுக்காக அறிகுறிகள் இல்லாமை

நோக்கம்
காயப்பட்ட நோயாளியின் உடலுறுப்புகளுக்குத் தேவையான குருதிச் சுற்றோட்டத்தை சீராக வைத்திருப்பதே ஆகும்.

DRAB
நோயாளிக்கு சீரான சுவாசமில்லை.
· யாரிடமாவது அம்புலன்ஸ் வண்டியை அழைப்பதற்கு அல்லது வைத்திய உதவியை நாடத்தேவையான போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு உத்தரவிடவும். நீங்கள் மட்டும் தனியாக இருந்தால் இவற்றை நீங்களே செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.. அத்துடன் நோயாளியை தனியே விட்டுச் செல்லவும் நேரிடலாம். கீழ் குறிப்பிடும் முறையில் மார்பழுத்தத்தை மேற்கொள்ளவும்.

மார்பழுத்தல்

நோயாளியார்பழுத்தம்
· நோயாளியின் அருகில் முழந்தாலிடவும்
· ஓரு உள்ளங்கையின் அடிப்பகுதியை நோயாளியின் நெஞ்சின் நடுப்பகுதியில் வைக்கவும்.
· உங்களது அடுத்த உள்ளங் கையின் அடிப்பகுதியை நோயாளியின் நெஞ்சின் மேல் வைத்துள்ள உங்களது புறங்கையின் மேல் வைக்கவும்.
· விரல்களை இருக்கமாக பூட்டிய உங்களது கைகள் மேல் வயிற்றுப்பகுதிக்கு அல்லது நடு மார்பெண்பின் கீழ்ப்பகுதியிலும் அளவூக்கு அதிகமான அழுத்தத்தை வழங்காதவாறு உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
· நோயாளிக்கு அருகில் முழந்தாலிட்டு அமரவூம் உங்கள் கைகள் வளையாமல் நேராக மார்பெண்பு கீழ் நோக்கி அசையும் வன்னம் 4-5 செ.மீ ஆழம் வரை அழுத்தவும்
· 30 மார்பழுத்தம் கொடுக்கவூம்.

குறிப்பு
ஓவ்வொரு மார்பழுத்தத்தின் பின்னும் உங்கள் கைக்கும் நோயாளியின் நெஞ்சுக்கும் தொடுகை அற்றுப்போகா வன்னம் முழு அழுத்தத்தையும் நெஞ்சிலிருந்து விடுவிக்கவும். (ஒவ்வொரு அழுத்தத்தின் பின்னும் நோயாளியின் நெஞ்சுப்பகுதியை முற்றாக மீள் நிலையை அடைய விடவும்.) கண்டிப்பாக அழுத்தத்தின் போதும் விடுவிப்பின்போதும் ஒரே அளவான நேரத்தை எடுக்கவூம்.
மார்பழுத்தமானது ஒரு நிமிடத்திற்கு 100 எனும் வீதத்தில் வழங்கள் வேண்டும். அழுத்தமானது சரியான வேகத்தல் பிரயோகிக்கப்பட்டதைக் குறிப்பதேயன்றி ஒவ்வொரு நிமிடத்திலும் வழங்கப்படும் அனைத்துமல்ல. வழங்கப்பட்ட எண்ணிக்கை தீர்மானிக்கப்படுவது அளவின் மாத்திரமன்றி சுவாசப்பாதை திறக்கும் வகையில் வழங்கப்பட்ட மீளுயிர்ச்சுவாச எண்ணிக்கையிலுமாகும்.

 

மார்பழுத்தத்துடனான மீளுயிர்ச்சுவாசம்: ( Rescue Breath)

உயிர்ச்சுவாசம்
30 மார்பழுத்தத்தின் பின்னும் மீண்டும் தலையை பின்னோக்கி அசைத்து நாடியை உயர்த்துவதன் மூலம் திறந்த சுவாசப்பாதையை உருவாக்கவும்.
உங்கள் கை நோயாளியின் நெற்றியில் இருக்குமாறு உங்கள் பெருவிரலாலும் சுன்டு விரலாலும் நோயாளியின் மூக்கின் மென்மையான பாகத்தை அமத்திப்பிடிக்கவும்.
சீரான திறந்த சுவாசப்பாதையூடன் நோயாளியின் வாயைத்திறக்வும்.
சாதாரன சுவாசம் ஒன்றை எடுத்து உங்கள் உதட்டால் நோயாளியின் வாயை நன்கு மூடியிருப்பதை உருதி செய்து கொள்ளவும்.
நோயாளியின் நெஞ்சுப்பகுதி உயர்வதை அவதானிப்பதுடன் உயரும் வரை வாயினுள் ஊதவும்,சாதாரன சுவாசத்தின் போது போல் நெஞ்சுப்பகுதி மேலெலும்புவதற்கு அன்னளவாக 01 செக்கன் வரை எடுக்கும். இதுவே பலனுள்ள உயிர்ச்சுவாசமாகும்.
திறந்த சுவாசப்பாதையை சீர்செய்யவும், நோயாளியின் வாயிலிருந்து உங்கள் வாயை எடுக்கவும். அத்துடன் காற்று வெளி வருவதன் முலம் நோயாளியின் நெஞ்சுப்பகுதி கீழாக அமைவதையும் அவதானிக்கவும்.
மீண்டும் ஒரு முறை வாய்க்கு வாய் வைத்து உயிர்ச் சுவாசமொன்று கொடுக்கவும். .
30 மார்பழுத்தத்திற்கு 2மீளுயிர்ச் சுவாசம் எனும் விகிதப்படி தொடர்ந்து மேற்கொள்ளவும்
நோயாளி சாதாரணமாக சுசாசிக்க ஆரம்பித்த பின்னர் மட்டுமே நீங்கள் மீள் பரிசீலனைக்காக இச்செயற்பாட்டை நிறுத்தலாம் செயற்பாட்டில் தடங்களை ஏற்படுத்தாதீர்.

நீங்கள் வழங்கிய உயிர்ச்சுவாசத்தினால் நோயாளியின் நெஞ்சுப்பகுதி மேலெலும்பா விடில் அடுத்த முயற்சிக்கு முன்
நோயாளியின் வாயினுள் கண்ணுக்குப் புலப்படக்கூடிய ஏதும் பிறபொருள் உண்டா எனப் பார்க்கவும்.
தலையைப் பின்னோக்கி இழுத்து நாடியினால் உயர்த்தி சீரான காற்றுப்பாதையை உருவாக்கிருப்பது சரியா என மீள் பரிசீலிக்கவும்
மார்பழுத்தத்திற்குத் திரும்புமுன் இரண்டு முறைக்கு மேல் மீளுயிர்ச்சுவாசம் வழங்க முயற்சிக்க வேண்டாம்.

 

மார்பழுத்தத்திற்குத் திரும்புதல்

 

ஒன்றுக்கு மேற்பட்ட முதலுதவியாளர்கள் இருந்தால், ஏற்படும் களைப்பிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கு மற்றையவர் ஒவ்வொரு 02 நிமிடத்திற்கு CPR இணை மாரி மாரி செய்தல் வேண்டும். மற்றைய முதலுதவியாளருக்கு ஒப்படைக்க எடுக்கும் காலத்தைக் குறைத்துக் கொள்ளல் கட்டாயம்.

வாயால் மூக்கிற்கு சுவாசம் வழங்கல்

வாயால் மூக்கிற்கு உயிர்ச்சுவாசம் வழங்குவது என்பது வாய்க்கு வாய் பலனுள்ள உயிர்ச்சுவாசம் வழங்குவதற்குப் பதிலீடாகும். இது நோயாளியின் வாய் அளவுக்கதிகம் காயப்பட்டிருந்தால் அல்லது திறக்க முடியாவிட்டால் கருத்திற் கொள்ளப்படும். நோயாளிக்கு நீரில் அல்லது வாய்க்கு வாய் அடைப்பது சாத்தியமற்ற இடத்தில் உதவுகிறார்.

சாதாரணமாக தலையைப் பின்னால் சாய்த்து நாடியை உயர்த்தும் முறையைப் பின்பற்றவும். .
சாரணமாக மூச்சை எடுங்கள்
நோயாளியின் வாயை மூடவும்
உங்கள் உதடுகளால் நோயாளியின் மூக்கை மூடிக்கொள்ளவும். சரியாக மூக்கினுள் ஊதவும், அத்தோடு சாதாரணமாக நெஞ்சு மேலெலுவது போன்று மேலுயரச் செய்ய சுமார் ஒரு செக்கன் எடுக்கவும். இதுவே பயனுள்ள உயிர்ச்சுவாசம்.

இந்த எளிமையான நடவடிக்கை எண்ணற்ற உயிர்களைக்காக்கும்

தனியாக இருப்பின்

அம்பியூலன்ஸ் கிடைக்காவிட்டால் பாதிக்கப்பட்டவரை தேறும் நிலையில் ஏற்றிச் செல்லக்கூடிய ஒரு வாகனத்தை தேர்ந்தெடுக்கவும்.

முச்சக்கர வண்டியைப் பயன்படுத்தவேண்டாம்.
வளர்ந்தோருக்கான உயிர் காப்பு முறை
உணர்வில்லை

உதவி கோரி சப்தமிடல்

திறந்த சுவாசப்பாதை

சீரான சுவாசமின்மை

உதவிக்கு அனுப்புதல்
(அல்லது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லல்)

30 மார்பழுத்தம்

02 மீளுயிர்ச்சுவாசம்

30 மார்பழுத்தம்