மயக்கம்

மயக்கமடைவதற்கான அறிகுறிகளும் அடையாளங்களும் பரிகாரமும்.

பின்னணித் தகவல்

முதலுதவி பற்றி அறிந்திருக்கும் ஆளொருவருக்கு மயக்கம் பொதுவானதும் கையாள்வதற்கு எளிமையானதுமான ஒரு நிலையாகும். மிகக்குறுகிய ஒரு காலப்பகுதிக்கு மூளைக்குப் போதியளவு இரத்தவோட்டம் கிடைக்காததினால் இது ஏற்படுகின்றது. நீண்ட நேரமாக நின்றுக்கொண்டிருத்தல், பசி, அதி விரைவாக எழுந்து நிற்றல், வெப்பமான சுற்றாடல் முதலியவற்றின் காரணமாக இது ஏற்படலாம். கர்ப்பம் தரித்த ஆரம்ப கட்டத்திலும் மயக்கம் ஏற்படலாம்.

அறிகுறிகளும் அடையாளங்களும்

மயங்கிவிழுதலும் மிகக் குறுகிய நேரத்திற்கு சுயநினைவற்றிருத்தலும்
வெளிறிய, சாம்பல நிற, குளிர்ந்த, ஈரமான சருமம்.
மெதுவான நாடித் துடிப்பு, பாதிப்புற்றவர் மயக்கம் தெளிந்ததும் வேகம் அதிகரிக்கும்.

குறிக்கோள்

மூளைக்கு குறுதிச்சுற்றோட்டத்தை மேம்படுத்துவதும் பாதிப்புற்றவருக்குத் தைரிய மூட்டுதலும்.

பரிகாரம்

ஆபத்து, பதிலளித்தல், சுவாசப்பதை, சுவாசம், குருதிச்சுற்றௌட்டம் என்பவற்றை மதிப்பிடு செய்து முன்னுரிமைகளுக்கு ஏற்ப சிகிச்சையளிக்கவும்.

பாதிப்புற்றவரை தரையில் கிடத்தி கால்களை மெதுவாக உயர்த்தி ஆதாரம் வைக்கவும்