கிருமி தொற்றுக் கட்டுப்பாடு

கிருமி தொற்றுக் கட்டுப்பாடு

 

தொற்று இடம்பெறும் வழிகள் குறைக்கும் வழிகள்

நேரடியாக தொற்றுதல்

கைகள்

முத்தம் கொடுத்தல்

நெருங்கிய தொடர்பு

உடற்திரவியங்கள்

கறைபடிந்த பொருட்கள்

 

எச்சங்கள் (சிறு துளிகள்)

தும்மல்

இருமல்

துப்புதல்

மலசலகூட கழிவகற்றல்

 

உட்கொள்ளுதல்

கைகள்

உணவு

 

தடுப்பூசி

கூர்மையான காயம் கடிகள்

 

கைகளை கழுவுதல்

பாதுகாப்பு கையுறைகளை அணிதல்

தொற்று இருப்பதாக தெரியுமிடத்து முத்தம் கொடுத்தலைத் தவிர்த்தல்

பாதுகாப்பான உடலுறவு நடைமுறைகள்

உடற் திரவங்களைப் பாதுகாப்புடன் கையாளுதல்

மேற்பரப்பில் தொற்று நோய் அகற்றுதல்

கல்வியறிவூட்டுதல்

வழமையான சுத்தமாக்கிகளை பாவித்தல்

நீரூற்று முன் மலசலகூட மூடியை மூடவும்

 

கைகளை கழுவுதல்

 

பாதுகாப்பான உணவுப் பொருட்களை நன்றாக தயாரித்தல்

 

காயங்கள் அனைத்தையும் மூடி வைப்பதற்கு உள்ளூர் நடைமுறைகளைப் பின்பற்றவும்

 

   

 

தொற்றுக்களைத் தடுப்பதற்கான வழிகாட்டிகள்

பின்வரும் வழிகாட்டிகள் தொற்றுக்கள் பரவுவதைத் தடுப்பதற்கு துணைபுரியும்.

வசதிகள் இருப்பின் உங்கள் கைகளை நன்றாக கழுவவும்

கைகளை சூடான ஒடும் நீரால் கழுவப்படுதல் வேண்டும். ஆனால் கைகள் காயமாகும் அளவுக்கு கொதி நீரால் அல்ல.

நீங்கள் மென்மையான திரவ சவர்க்காரம் பாவித்தல் வேண்டும். பலர் உபயோகிக்கும் சவர்க்காரத்தில் கெடுதலான பக்றீரியா பரவக்கூடும்.

எவரேனும் நோயாளியை கையாண்ட பின்னர் குறைந்தது 1-2 நிமிடங்களுக்காவது கைகளைக் கழுவுதல் வேண்டும்.

உடல் திரவம் எதுவும் உங்கள் கைகளில் பட்டால் கைகளை கழுவுதல் வேண்டும்.

முடியுமானால் பாவனையின் பின்னர் எறிந்துவிடக்கூடிய கையுறைகளை கொண்டு செல்லவும். சிகிச்சை அளிக்கும்போது அவற்றைப் பாவிக்கவும்.

கையுறைகள் இல்லாவிட்டால் பாதிப்புற்றவரின் காயங்களுக்கு அவரையே மருந்து கட்டுமாறு கூறவும். அல்லது சுத்தமான பிளாத்திக்க உறையொன்றினுள் கைகளை போட்டுக்கொள்ளவும்.

உங்கள் கைகளில் வெட்டுக்கள், உராய்வுகள் எவையுமிருப்பின் நீர்த்தடையுள்ள கட்டுத்துணிகளை வைத்திருக்கவும்.

காயத்தை அல்லது காயத்தில் படக்கூடிய கட்டுத்துணியின் ஏதேனும் பாகத்தை தொடுவதை தவிர்க்கவும்.

பாதிப்புற்றவருக்கு சிகிச்சை அளிக்கும்போது காயத்தின்மீது சுவாசிப்பதனை இருமுதலை தும்முதலைத் தவிர்க்கவும்.

ஏதேனும் கண்ணாடி அல்லது கூர்மையான பொருட்களை உங்களைக் குத்தாதவாறு கவனமாயிருக்கவும்.

குருதி தோய்ந்த கட்டுத்துணிகள் அல்லது கறைபடிந்த பொருட்கள் சரியான முறையில் ஒழிக்கப்படுவதை உறுதிப்படுத்தவும் ( வழமையாக எரித்தல்)

முதலுதவி வரைவேடுகளின் நாளடைவிலான திருத்தங்களுக்கு அல்லது ஏனைய முதலுதவி பயிற்சியாளர்களுடன் தொடர்புகொள்வதற்கு பின்வரும் இணையத்தளம் பயனுடையதாயிருக்கும்