தலைக்காயங்களுக்கான அறிகுறிகளும் அடையாளங்களும் பரிகாரமும்
பின்னணித் தகவல்
தலைக் காயங்கள் உயிருக்கே அச்சுறுத்தலானவையாக இருந்தபோதிலும் அவற்றுள் பெரும்பாலானவை சிறியவையே. எனினும் மருத்துவ ஆலோசனை பெறுதல் வேண்டும். சுயநினைவின் மட்டத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் எந்தவொரு நிலைமையும் வேறு காயங்களை மறைத்துவிடும் என்பதனை முதலுதவியைப் பற்றி அறிந்திருக்கும் எவரும் நினைவிற் கொள்ளுதல் வேண்டும். வேறு ஏதேனும் காரணத்தினால் ( உதாரணம் வலிப்பு) சுயநினைவை இழப்பதானாலும் தலைக்காயம் ஏற்படலாம் என்பதை மனதிற்கொள்ளவும். 3 நிமிடங்களுக்கு மேல் சுயநினைவற்ற நிலையில் இருந்தால் தலையில் பிளவு இருக்கலாம் என சந்தேகிக்க இடமுண்டு.
தலைக்காயங்களை மூன்று பிரதான வகைகளாகப் பிரிக்கலாம்.
மூளை அசைதல்
மூளை அழுத்தம்
மண்டையில் பிளவு
மூளை அசைதலும் அறிகுறிகளும் அடையாளங்களும் பரிகாரமும்
பின்னணித் தகவல்
மண்டையோட்டிற்குள் மூளை ஒரளவு அசைவதற்கு இடமுண்டு. தலையில் பலமாக அடிபட்டால் மூளை அசையும். இதனால் பாதிப்புற்றவர் மயக்கமடையலாம். மூளை அசைவால் இத்தகைய சுயநினைவற்ற நிலை சிறிது நேரமே நீடிக்கும்.
மூளை அசைதல்
அறிகுறிகளும் அடையாளங்களும்
தலையில் அடிபட்டதற்கான வரலாறு
சொற்ப நேரம் சுயநினைவில்லாதிருத்தல்
வெளிறிய முகம்
தலைச்சுற்று
தேறியதும் சுகவீனமுற்ற உணர்வு
சம்பவத்திற்கு சற்று முன்னர் அல்லது சம்பவத்தின்போது நடந்தவை ஞாபகமில்லை
தலை வலி
குறிக்கோள்
பாதிப்புற்றவர் விரைவாகவும் பாதுகாப்புடனும் குணமடைவதை உறுதிப்படுத்துதல்
மருத்துவ ஆலோசனை பெறுதல்
பரிகாரம்
எப்போதும்போல ஆபத்து, பதிலளித்தல், சுவாசப்பாதை, சுவாசம், குருதிச்சுற்றோட்டம் என்பவற்றை மதிப்பீடுசெய்யவும்.
பாதிப்புற்றவர் சுயநினைவில்லாதிருந்தால் அவரை தேறும் நிலையில் இருத்தவும்.
ஏதேனும் குருதிப் பெருக்கை கட்டுப்படுத்தவும்
சுயநினைவின் மட்டத்தையும் சுவாசத்தையும் நாடித்துடிப்பையும் கண்காணிக்கவும்
பாதிப்புற்றவர் மீண்டும் சுயநினைவிற்கு திரும்பியதும் சடுதியாக மீண்டும் மோசமடைகின்றாரா என அவதானிக்கவும்
பொறுப்புள்ள ஒருவர் பாதிப்புற்றவரைக் கவனிப்பதனை உறுதிப்படுத்தவும். ஒரு மருத்துவர் இவரைப் பார்க்கும்போது இவர் விளையாட்டையோ வேறு நடவடிக்கைகளையோ தொடர்ந்து மேற்கொள்ளக்கூடாது.
சொற்ப நேரமாவது சுயநினைவை இழக்கச் செய்யூம் அடியொன்றைத் தலையில் பெற்ற எவரையும் கட்டாயமாக ஒரு மருத்துவர் பார்க்க வேண்டும்.
மூளை அழுத்தம்
பின்னணித்தகவல்
அழுத்தம் ( நசுங்குபடுதல்) மேலும் பாரதூரமான ஒரு நிலைமையாகும். இந்த நிலையில் குருதிப்பெருக்கு அல்லது வீக்கம் மூளைக்கு அழுத்தத்தை கொடுக்கின்றது. இதனால் பாதிப்புற்றவரின் உயிருக்கே அச்சுறுத்தலாக அமையும் விதத்தில் நிலைமை மேலும் மோசமடையும்.
அறிகுறிகளும் அடையாளங்களும்
அண்மைய தலைக் காயத்தின் வரலாறு ( உதாரணம் ஒரு சில நிமிடங்களுக்குள் அல்லது நாட்களுக்குள் மூளை அசைதல்)
வெளிப்படையான முற்றாகத் தேறுதல்
குழப்பத்துடன் சேர்ந்து நிலைமை மோசமடைதல்
கடுமையான தலைவலி
மெதுவான, சத்துத்துடன்கூடிய சுவாசம்
மெதுவான நாடித்துடிப்பு
ஒரே சமமாக இல்லாத கண்மணி
வெப்பமான, முகம் சிவந்த தோற்றம் உடம்பின் ஒரு பக்கத்தில் அப்படியே பலவீனம் அல்லது சோர்வாதம்
வாந்தியெடுத்தல்
குறிக்கோள்
மருத்துவர் உதவி பெறுதல்
மூர்ச்சித்திருந்தால் பரிகாரம்
ஆபத்து, பதிலளித்தல், சுவாசப்பாதை, சுவாசம், குருதிச்சுற்றோட்டம் என்பவற்றை மதிப்பீடுசெய்யவும்.
பாதிப்புற்றவரை தேறும் நிலையில் இருத்தவும்.
சுவாசத்தையும் நாடித்துடிப்பையும் சுயநினைவின் மட்டத்தையும் கண்காணிக்கவும். பாதிப்புற்றவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுதல் வேண்டும்.


