மாரடைப்பிற்கான அறிகுறிகளும் அடையாளங்களும் பரிகாரமும்

பின்னணித் தகவல்

துரதிஷ்டவசமாக மாரடைப்பு மிகவும் பொதுவாதொன்றாகி வருகின்றது. ஆதலால் முதலுதவி அளிப்வர்கள் கூடுதலாக அவர்களை கையாள வேண்டிய சாத்தியமுண்டு. அத்துடன் மாரடைப்பால் பாதிக்கப்படக்கூடிய ஆட்களின் வயதும் குறைந்து வருகின்றது.

மாரடைப்பிற்கான அறிகுறிகளும் அடையாளங்களும் பரிகாரமும்

சுவாசிப்பதில் சிரமம்

நெஞ்சின் நடுவில் தொடர்ச்சியான, நொறுக்குவரைப்போன்று இறுக்கமான வலி

வலி இடது கைக்கும் தாடைக்கும் கழுத்துக்கும் பரவக்கூடும். சிலவேளை இரண்டு கைகளும் தோள்பட்டைகளுக்கு இடைப்பட்ட பகுதியும் பாதிக்கப்படலாம்.

ஒய்வெடுத்துக்கொண்டாலும் வலி மறைய மாட்டாது. ஓய்ந்திருக்கும்போது வலி ஆரம்பிக்கலாம்.

அடிவயிற்றில் அஜீரணத்தைப்போன்று வலி அல்லது அசௌகரியம் ஏற்படலாம்.

பாதிப்புற்றவர் அமைதியற்று பதற்றுமுறுவார். வாந்தியும் எடுக்கலாம்.
நாடித்துடிப்பு வேகமாக இருந்து பலவீனமுற்று சீரற்றதாகவும் இருக்கலாம்.

பெருமளவு பயத்தின் அல்லது பேரச்சத்தின் உணர்வுஏற்படும்.

பாதிப்புற்றவர் சடுதியாக மயங்கி விழக்கூடும்.. சுவாசமோ நாடித்துடிப்போ இருக்க மாட்டாது.

அதிர்ச்சியின் அறிகுறிகளும் அடையாளங்களும் தென்படும். முகம் வெளிறி சாம்பல் நிறமாயிருக்கும்.

குறிக்கோள்
இருதயத்தின் வேலைப் பளுவைக் குறைத்தல். அதற்கு ஒய்வு கொடுத்தல்.
அவசர மருத்துவ உதவியைப் பெற்றுக்கொடுத்தல்

பரிகாரம்

ஆபத்து, பதிலளித்தல், சுவாசப்பாதை, சுவாசம், குருதிச்சுற்றோட்டம் என்பவற்றை மதிப்பிடுசெய்து எவையேனும் முன்னுரிமைகளுக்குச் சிகிச்சையளிக்கவும்.

பாதிப்புற்றவரை அரை இருக்கை நிலையில் வைத்து கூடியவரை அவரை சௌகரியமாக இருக்கவிடவும். அவரது தலைக்கும் தோள்களுக்கும் ஆதாரம் அளிக்கப்பட்டிருப்தை உறுதிப்படுத்தவும். அத்துடன் மேலதிக ஆதாரத்திற்கு முடியுமானால் அவரது முழங்கால்களின் கீழ் கம்பளி ஒன்றை வைக்கவும். இது அவர் சுவாசிப்பதற்கு உதவும்.

உதவி கேட்டனுப்பவும். ஒரு அம்பியூலன்ஸ் வண்டிக்கு அழைப்பு விடுக்கவும். நீங்கள் மாரடைப்பு எனச் சந்தேகிக்கின்றீர்கள் அவசர சேவைகளிடம் தெரிவிக்கவும்.

பாதிப்புற்றவரை கம்பளியால் மூடவும். அதிர்ச்சியால் அவர் குளிர்ந்துபோயிருக்கக்கூடும்.

பாதிப்புற்றவரின் மனதை திடப்படுத்தவும்.

பாதிப்புற்றவரின் நாடித்துடிப்பும் சுவாசமும் எந்நேரத்திலும் நின்றுவிடக்கூடும். ஆதலால் அவற்றை உன்னிப்பாக அவதானிக்கவும். ஆதலால் மீளுயிர்ப்பிப்பதற்கு தயாராகயிருக்கவும்.
பாதிப்புற்றவர் மூர்ச்சித்தால் அவரைத் தேறும் நிலையில் வைக்கவும்.
மருத்துவ அதிகாரிகளுக்கு அறிவிப்பதற்கு நீங்கள் செய்தவை, கண்டவை, அனைத்தையும் குறித்து வைக்கவும்.

இதேபோன்ற அறிகுறிகளையும் அடையாளங்களையும் காட்டும் மற்றுமொரு நிலைமை முடக்குவலியாகும்
இது வழமையாக உடற்பயிற்சியில் ஆரம்பித்து ஒய்வூ எடுப்பதன்மீது அகன்றுபோகும். பாதிப்புற்றவரிடம் அவரது சொந்த மருந்து இருக்கக்கூடும். நாக்கின் அடியில் வைப்பதற்கு வில்லையொன்று.

பாதிப்புற்றவர் இதனை உட்கொண்டு மாரடைப்பிற்குப்போன்று அதே நிலையில் ஓய்வெடுக்க விடவூம். வலி தொடர்ந்திருந்தால் அல்லது நிலைமை முடக்குவலியா மாரடைப்பா என உங்களுக்கு நன்றாக தெரியாவிட்டால் அம்பியூலன்ஸ் வண்டியை அழைக்கவும்.

தனிமையாக இருப்பின்

நீங்கள் தனியாக இருந்து பாதிப்புற்றவரை மருத்துவமனைக்கு எடுத்து செல்வதற்கு அம்பியூலன்ஸ் ஒன்றை அழைக்க முடியாதிருந்தால் பாதிப்புற்றவரை நடத்திச் செல்லக்கூடாது என்பது முக்கியமாகும். ஏனெனில் இது இருதயத்துடிப்பின் வேகத்தை மேலும் அதிகரிக்கச் செய்து நிலைமையை மேலும் மோசமாக்கிவிடும். பாதிப்புற்றவர் சரியான நிலையில் ( முழங்கால்களை மடித்து அரை இருக்கை நிலை) உட்கார்ந்திருப்பதற்கு ஏதுவான வாகனம் ஒன்றைப் பயன்படுத்தவும்.

முச்சக்கர வண்டியொன்றைப் பயன்படுத்த வேண்டாம்.