வெப்பமும் குளிரும்
வெப்பத்தினதும் குளிரினதும் தாக்கம்
பின்னணித் தகவல்
குளிரினாலும் வெப்பத்தினாலும் ஏற்படும் பாதிப்புகளை வழமையாகக் கையாள்வதற்கு அறிந்திருந்தாலும் பாதிப்புற்றவர்களை மிகுந்த சுகவீனமாக்கக்கூடிய அல்லது அவர்களது உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடிய நிலைமைகளும் உண்டு என்பதனை அறிந்துகொள்வதற்கு இந்தப் பாகம் உதவுகின்றது. அத்தகைய நிலைமை எப்போது ஏற்படும் என்பதை நீங்கள் கண்டு கொள்வது அவசியம். கடுமையான வெப்ப நிலை அல்லாத வெளிப்புறங்கள், குளிர் அறைகள், கொதி அறைகள் சூலை அறைகள் போன்ற இடங்களில் இவை ஏற்படலாம்.
உடல் வெப்பநிலை
உடல் எம்மைச்சுற்றியுள்ள வெப்ப நிலைகளில் குறிப்பிடத்தக்க அளவு மாறக்கூடும் எனினும் அநேகமான நேரங்களில் எம்மால் எமது உடலின் வெப்பத்தை ஒரே சீராக வைத்திருக்க முடிவதில்லை. வழமையான எமது உடல் எப்படி வெப்பநிலையை 37” C ஒழுங்குபடுத்துகின்றது என்பதனைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்வது அவசியம். உணவு சக்தியாகவும் தடை செயற்பாடாகவும்( உடற்பயிற்சி அல்லது நடுக்கத்தின் ஊடாக) மாறும்போது உடலினுள் வெப்பம் பிறப்பிக்கப்படுகின்றது. சூரியனிலிருந்தும் சூடான உணவை அல்லது பானத்தை உட்கொள்வதன்மூலம் அல்லது சூடான பொருட்களைத் தொடும்போதும் உடலால் வெப்பம் உறிஞ்சப்படுகின்றது. சுவாசத்தின் ஊடாக அல்லது உடலின் மேற்பரப்பின் ஊடாகவும் வெப்பம் இழக்கப்படுகின்றது. ( வெளியிலுள்ள சுற்றாடல் உடலைவிடக் குளிராக இருக்குமாயின்) மூளையிலுள்ள ஒரு “ தேமொஸ்டட் ” எனும் வெப்பக்கட்டுப்பாட்டு பகுதியானது பெறப்படும் வெப்பத்திற்கும் இழக்கப்படும் வெப்பத்திற்கும் இடையில் ஒரு சமநிலையை பேணுகின்றது.
| வெளியிலுள்ள வெப்ப நிலை சூடாக இருக்கும்போது உடல் அதன் சூட்டை இழக்கும்விதம் | வெளியிலுள்ள வெப்ப நிலை குளிராக இருக்கும்போது உடல் அதன் சூட்டை சேமிக்கும் விதம் |
| மேற்பரப்பில் குருதி நாளங்களை விரிவடையச் செய்வதன்மூலம் | மேற்பரப்பில் குருதி நாளங்களை சுருங்கச் செய்வதன்முலம் |
| கூடுதலாக வியர்த்தலின்மூலம் | குறைவாக வியர்த்தலின்மூலம் |
| மேலும் விரைவாவும் ஆழமாகவும் வியர்த்தலின் மூலம் | உடல் மயிர்களை கூர்ச்செறிய வைப்பதன்மூலம் |
அதிக வெப்பத்தின் தாக்கங்கள்
ஒரு சில நிலைமைகளில் உடலால் வெப்பத்தை தணிக்க முடியாதிருக்கின்றது. அவையாவன :
வெளியிலுள்ள வெப்ப நிலை மிகவூம் சூடாக இருக்கும்போது ( கதிர்வீச்சின் மூலம் வெப்பத்தை இழப்பது உடம்புக்கு மேலும் சிரமமாகின்றதால்)
கூடுதலான ஈரலிப்புத்தன்மை இருக்கும்போது ( காற்றிலுள்ள ஈரத்தன்மை வியர்வையின் மூலம் வெப்பத்தை இழப்பதில் சிரமம் இருப்பதனால்)
கடுமையான உடற்பயிற்சியின் போது ( செயற்பாடு அவ்வளவு வெப்பத்தை உண்டு பண்ணுவதால்)
இத்தகைய மோசமாக நிலைமைகள் ஏற்படும்போது ( விசேடமாக இவை ஒரே நேரத்தில் ஏற்பட்டால்) உடலால் வெப்பத்தை விரைவாக இழக்க முடியாதிருக்கின்றது. அத்துடன் இரண்டு பொதுவான நிலைமைகள் ஏற்படலாம். அவையான வெப்பத்தின் வெளியேற்றம் அல்லது வெப்பத் தாக்கம்
வெப்பத்தின் வெளியேற்றம்
அளவுக்கதிகமான வியர்வையின் ஊடாக உப்பும் நீரும் வெளியேறுவதனால் வெப்ப வெளியேற்றம் ஏற்படுகின்றது.
அறிகுறிகளும் அடையாளங்களும்
வெளியேறிய, குளிர்ந்த வியர்வையுடனான சருமம்
துரிதமான பலவீனமான நாடித்துடிப்பு
விரைவானஇதாழ்ந்த சுவாசம்
வாந்திக் குணம், வாந்தி எடுக்கக்கூடும்
தாகம்
தலைச்சுற்று அல்லது குழப்பம்
தசைப்பிடிப்பு
சுய உணர்வு நிலையில் வீழ்ச்சி மயக்கம் ஏற்படலாம்
பரிகாரம்
பாதிப்புற்றவரை குளிர்மையாக வைத்திருக்கவும் ஆனால் அளவுக்கதிகமாகக் குளிரடைய விட வேண்டாம்.
கொஞ்சம் கொஞ்சமாக நீர் பருக்கவும் அல்லது போஷாக்கு பானம் பருகக் கொடுக்கவும்
உப்பு இருந்தால் அதில் சிறிதளவை நீரில் கலக்கலாம் ( 2 லீற்றர் நீருக்கு 1 தேக்கரண்டி)
நோயாளி சுய நினைவிழந்தால் அவரைத் தேறும் நிலையில் வைக்கவும்
சுவாசத்தையும் நாடித்துடிப்பபையும் சுய உணர்வின் மட்டத்தையும் கண்காணிக்கவும்
மருத்துவ உதவிக்கு எடுத்துச் செல்லவும்
வெப்பத் தாக்கம்
மூளையிலுள்ள “ தேமொஸ்டட்” செயலிழப்பதனாலும் உடல் துரிதமாகவும் பயங்கரமாகவும் சூடாவதனாலும் இது ஏற்படுகின்றது.
அறிகுறிகளும் அடையாளங்களும்
முகம் சிவத்தல்
சூடான உலர்ந்த சருமம்
மெதுவான, ஆழமான, ஓசையூடனான சுவாசம்
பாதிப்புற்றவர் தாம் சூடாக இருப்பதாக உணர்வர்
தலைவலி இருப்பதாக முறையிடுவார்
விரைவில் சுய உணர்வை இழக்கலாம்.
பரிகாரம்
குளிர்நீரால் ஒத்தடம் கொடுப்பதன்மூலம் அல்லது ஈரமான போர்வையில் மூடுவதன் மூலம் பாதிப்புற்றவரை குளிரடையச் செய்யவும்
குளிரடைவதற்கு உதவியாக விசிறவும்
சுயநினைவுடனிருந்தால் அவரை சௌகரியமான நிலையில் இருத்தவும். வழமையான முறையில் உட்கார செய்தல்
சுயநினைவற்றிருந்தால் தேறும் நிலையில் வைக்கவும்
மருத்துவ உதவி கோரவும் அல்லது மருத்துவமனைக்கு எடுத்து செல்லவும்
எதனையும் குடிக்கக் கொடுக்க வேண்டாம்
காய்ச்சல்
இது வழமைக்கு மாறான அதிக வெப்ப நிலையாகும். இது பல நிலைமைகளினால் ஏற்படுத்தப்படுகின்றது. அவற்றுள் பின்வருவன அடங்கும்
மலேரியா
நெருப்புக் காய்ச்சல்
ஈரலழற்றி
நுரையீரலழற்சி
ஒருவருக்கு காய்ச்சல் காய்ந்தால் அவர்கூடிய விரைவில் மருத்துவரை நாட வேண்டும்.
மருத்துவ உதவிக்காகக் காத்திருக்கும்போது அல்லது பயணத்தின்போது முதலுதவி பற்றி அறிந்திருக்கும் ஒருவர் முன்னர் வெப்பத் தாக்கத்துக்கு விவரிக்கப்பட்டவாறு பரிகாரத்தை பயன்படுத்தி நோயாளியின் வெப்ப நிலையைக் குறைக்க முயல வேண்டும்.
ஒருசில வேளைகளில் உடல் வெப்ப நிலை 40” Cக்கும் மேலாக அதிகரித்தால் நோயாளிக்கு வலிப்பு ஏற்படலாம். அப்படி ஏற்பட்டால் தொடர்ந்தும் உடல் வெப்பத்தை தணிக்க முயலவும். ஆனால் வலிப்புக்கு விவரிக்கப்பட்டது போல் பரிகாரம் செய்யவும்.
உறைபனிக் கடி
மிகவும் குளிரான நிலைமைகளில் மேற்பரப்பின் அருகிலுள்ள குருதி நாளங்கள் சுருங்கிவிடுகின்றன. இதனால் வெப்பம் உடலின் நடுப்பகுதியில் தேங்கி விடுகின்றது. கை கால் விரல்களிலுள்ள இழையங்கள் உறைந்து போவதால் இந்நிலையில் உறைபனிக்கடி ஏற்படலாம்.
அறிகுறிகளும் அடையாளங்களும்
கை கால் விரல்கள் குளிர்ந்து போதல்
வெளிறிய ஒளிரும் தோற்றம்
கை கால் விரல்களில் வலி பின்னர் விரைத்தல்
நீண்ட நேரத்தின் பின்னர் கை கால் விரல்கள் நிறம் மாறுதல் அல்லது கறுமையாதல்
பரிகாரம்
கமக்கட்டிலிருந்து அல்லது தொடை இடுக்கிலிருந்து எடுத்த சூட்டைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பாகத்தை சூடாக்கவும்
அல்லது சுடுநீரில் ( உடற் சூட்டிற்குச் சற்று கூடுதலான) வைக்கவும்
ஈர ஆடைகளைக் கழற்றி விடவும்
மருத்துவ உதவி பெறவும்
பாதிக்கப்பட்ட பாகத்தை தேய்க்க வேண்டாம்
தாழ்ந்த வெப்பம்
உள் உடலின் வெப்ப நிலை 35” C யைவிடக் குறைவாக இருக்கும்போது பொதுவாக தாழ்ந்த வெப்பம் ஏற்படுகின்றது. இத்தகைய நிலைமையில் உடலின் செயற்பாடுகளின் வேகம் குறைந்து சிலவேளை நின்றுவிடவும் கூடும். குளிரடைவதன் தன்மையையும் தனது வெப்ப நிலைமையைக் கட்டுப்படுத்துவற்கான உடலின் ஆற்றலையும் பொறுத்து தாழ்ந்த வெப்பம் விரைவாகவோ மெதுவாகவோ ஏற்படலாம். வயது, பொதுவான உடல் நிலை என்பனவும் இதற்கான காரணிகளாகலாம்.
அறிகுறிகளும் அடையாளங்களும்
சருமம் தொடுவதற்கு மிகவூம் குளிர்மையாக இருக்கும் ( ஆடைக்கு கீழே)
வெளிறிய அல்லது சாம்பல் நிறமான முகம்
மெதுவானஇ பலவீனமான நாடித்துடிப்பு
மெதுவான ஆழமான சுவாசம்
கட்டுப்படுத்த முடியாத நடுக்கம்
கதைப்பதில் சிரமம் அல்லது உலறல்
ஆடையைக் கழற்ற முயலலாம்.
சுயநினைவூ குறையலாம் பின்னர் மூர்ச்சிக்கலாம்.
பரிகாரம்
;
பாதிப்புற்றவரை நிழலுக்கு கொண்டு செல்லவும்
வேறு ஆடை இருந்தால் நனைந்த ஆடையைக் கழற்றவும்
பாதிப்புற்றவரை கம்பளியால் போத்தவும். முடியுமனால் உடற்சூட்டைப் பரிமாறிக்கொள்வதற்கு இன்னொருவருடன் சேர்த்து
சுயநினைவுடன் இருந்தால் சூடான பானத்தை ( சூடான சொக்கலேட் அல்லது சூப்) பருகக் கொடுக்கவும்
மருத்துவ உதவி பெறவும்


