பாதிப்புற்றவரைக் கையாளுதலும் பூர்வாங்க மதிப்பீடும்
பாதிப்புற்றவரைக் கையாளுதலும் பூர்வாங்க மதிப்பீடும்
பின்னணித் தகவல்
சம்பவத்தை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்ததும் பாதிப்புற்றவரை நீங்கள் எப்படி கவனிக்கப் போகின்றீர்கள் என்பது பற்றி சிந்திக்க வேண்டும். இந்த எளிமையான நடவடிக்கை பாதிப்புற்ற எவரையம் நீங்கள் எப்படி கையாளுவீர்கள் என்பதைக் காட்டுகின்றன.
உயிர் வாழ ஒட்சிசன் அவசியம்
ஒட்சிசன் குருதியின் ஊடாக உடம்பு முழுவதும் ஓடுகின்றது.
ஒட்சிசன் மூன்று நிமிடங்களுக்குமேல் மூளைக்கு கிடைக்காவிடில் மூளையின் இழையங்கள் இறக்க ஆரம்பிக்கும்ஆபத்து
முதலில் உங்களுக்கும் பின்னர் பாதிப்புற்றவருக்கும் ஏற்படக்கூடிய ஆபத்தையும் கவனிக்க மறக்க வேண்டாம்.
ஆபத்தான எதனையும் பாதுகாப்புடன் அப்பறப்படுத்தவும்
கண்டிப்பாக அவசியமானால் பாதிப்புற்றவரை ஆபத்திலிருந்து அப்புறப்படுத்தவும்
எதிர்ச்செயற்பாடு
பாதிப்புற்றவர் சுயநினைவுடன் உள்ளாரா எனப் பார்க்கவும்
“ நான் கதைப்பது கேட்கின்றதா” “ உதவி எதுவும் தேவையா” எனக் கேட்கவும்
“ உங்கள் கண்களை திறங்கள் ” எனக் கூறவும்.
பின்னர் மெதுவாகத் தோல் பட்டையில் தட்டவும். சற்று பலமாகத் தட்டினால் எவையேனும் காயங்களை மேலும் மோசமாக்கிவிடும்.
சுவாப்பாதை
நோயாளி தனது முகம் மேல் நோக்கி மல்லாந்த நிலையில் இருப்பதை உறுதிசெய்து கொள்ளவும். தலையை பின்னால் சாய்த்து நாடியை உயர்த்துவதன்மூலம் சுவாசப்பாதையை திறக்கவும்.
.
நோயாளியின் அருகில் முழந்தாழிடவூம்
பாதிப்பற்றவரின் நெற்றியில் ஒரு கையை வைத்து மெதுவாகப் பின்னால் சாய்க்கவும்.
மற்ற கையின் இரண்டு விரல்களை பாதிப்புற்றவரின் நாடியிற்கு அடியில் வைத்து நாடியை உயர்த்தவும். .
சுவாசம்
நோயாளியின் தலையில் கையை வைத்து இரண்டு விரல்களை நாடியில் வைத்து சுவாசப்பாதையை சீர் செய்து உங்கள் கன்னத்தை நோயாளியின் வாய்க்கு அருகில் வைத்து சாதாரண சுவாசத்தை பரீட்சிக்கவும்.
சாதாரண சுவாசத்தை கேட்டல்
மார்பின் கீழ் பகுதியிலும் வயிற்றுப் பிரதேசத்திலும் எதும் அசைவுகள் உண்டா எனப் பார்க்கவும்.
உங்கள் கன்னத்தில் சுவாசத்தை உணரவும்.
நோயாளி சாதாரணமாக சுவாசிக்கிறாரா என உறுதிப்படுத்திக் கொள்வதற்கு பார்த்தல், கேட்டல்,உணர்தல் என்ற முறையில் பத்து செக்கன்களுக்கு மேல் எடுக்க வேண்டாம்.
நோயாளி சாதாரணமாக சுவாசிக்கின்றாரா என சந்தேகம் ஏற்பட்டால் சாதாரணமாக சுவாசிக்கவில்லை என்ற முடிவுக்கு வரவும்.
குறிப்பு
( இருதயம் தடைப்பட்டு ஒரு சில நிமிடங்களில் நோயாளி வருத்தத்துடன் சுவாசிப்பார் அல்லது சீரற்ற இழுவையுடனான சுவாசத்தை மேற்கொள்வார். இது சாதாரணமான சுவாசம் என குழப்பிக்கொள்ள வேண்டாம்)
பாதிப்புற்றவர் உணர்விழந்தும் சுவாசிப்பாரேயானால் அவரை இப்பொழுது தேறும் நிலையில் வைக்கவூம்.
பாதிப்புற்றவர் உணர்விழந்தும் சாதாரணமாக சுவாசிக்காமலும் இருப்பின் அவருக்கு இப்பொழுது CPR வழங்க ஆரம்பிக்கவும்.
குருதிச்சுற்றோட்டம்
உடம்பு முழுவதும் ஒட்சிசன் செல்வதைக் பாதிக்கக்கூடிய இரண்டு நிலைமைகள் உள்ளன
இருதயம் நின்றுவிடக்கூடும். நீங்கள் CPR வழங்கவேண்டி ஏற்படும்.
குருதிக்கசிவூ இருக்கக்கூடும் அதனை விரைவாகவூம் திறமையூடனும் நிறுத்தவூம்.
பூர்வாங்க மதிப்பீடும் பரிகாரத்திற்கான முன்னுரிமைகளும் DARBC யைப்போன்று எளிமையானது.
Danger ஆபத்து
Response பதிலளித்தல
Airway காற்றுச் செல்வழி
Breathing சுவாசித்தல்
Circulation குருதிச்சுற்றோட்டம்
விடியோ 4 - சுவாசித்தலை சோதனையிடல்


