குருதியில் சீனியின் அளவு குறைதல்

அறிகுறியும் பரிகாரமும்

பின்னணித் தகவல்

நீரிழிவு நோயாளர்களிலேயே சீனி குறைவு காணப்படுகின்றது எனினும் ஏனைய நிலைமைகளின் சிக்க்ல்களினால் இது ஏற்படலாம்.

நீரிழிவு நோயாளர்களில் வழமையான அளவு இன்சுலினை ஈடுசெய்வதற்கு போதியளவில் காபோஹைரேட் கிடைக்காதபோதே பொதுவாக இந்நிலை ஏற்படுகின்றது. இது நீரிழிவு அல்லாவிடில், உணவ இன்மையே காரணமாகும். உடற்பயிற்சியானது இதனை இன்னும் அதிகரிக்கச் செய்யும்.

அறிகுறிகளும் அடையாளங்களும்

நீரிழிவு சார்ந்த வரலாறு இருத்தல்
அட்டையொன்றை எடுத்துச் செல்லலாம்.
இன்சுலின் எடுத்துச் செல்லலாம்.
“ சீனிக்குறைவு” ஏற்படப் போவதை நோயாளி அறிந்திருக்கலாம்.
பலவீனம், மயக்கம் அல்லது பசி
நடுக்கம்
குழப்ப நிலை அல்லது மூர்க்கமான நடவடிக்கை
வியர்த்தல்
வெளிறிய தோற்றம் குளிர்மையான ஸ்பரிசம்
பலமான படபடக்கும் நாடித்துடிப்பு
சுயநினைவின் மட்டத்தில் வீழ்ச்சி

குறிக்கோள்

பாதிப்புற்றவர் சுயநினைவுடன் இருந்தால் கூடிய விரைவில் சீனியின் மட்டத்தை உயர்த்துதல்.
பாதிப்புற்றவர் சுயநினைவற்றிருந்தால் விரைவாக மருத்துவ உதவி கோருதல்

பரிகாரம்

ஆபத்து, பதிலளித்தல், சுவாசப்பாதை, சுவாசம், குருதிச்சுற்றோட்டம் என்பவற்றை மதிப்பிடுசெய்யவும்.
பாதிப்புற்றவர் சுயநினைவற்றிருப்பின் அவரை தேறும் நிலைக்கு திருப்பி வைக்கவும்
உதவி கோரவும்
தேவையாயின் மீளுயிர்ப்பிப்பதற்கு தயாராகயிருக்கவும்.
பாதிப்புற்றவர் சுயநினைவுடன் இருப்பின் உட்காருவதற்கு அவருக்கு உதவவும்
இனிப்பு கலந்த பானங்களை பருகக்கொடுக்கவும் அல்லது சொக்லட் அல்லது குளுகோஸ் வில்லைகள் போன்ற இனிப்பாக சாப்பாட்டைக் கொடுக்கவும் (சுயநினைவின் மட்டத்தையிட்டு அவதானமாயிருக்கவும்)
நிலைமை சீரடைந்தால் மேலும் உணவு அல்லது பானம் எதனையும் கொடுத்து முற்றாக தேறும்வரை ஒய்வெடுக்க செய்யவும்
இந்த சம்பவத்தை ஒரு மருத்துவருடன் அல்லது தாதியுடன் கலந்துரையாடுமாறு பாதிப்புற்றவரிடம் கூறவும்
நிலைமையில் துரிதமாக முன்னேற்றல் இல்லாவிடில் மருத்துவ உதவி கோரவும்.