நஞ்சடைவதன் அறிகுறிகளும் அடையாளமும் பரிகாரமும்
பின்னணி தகவல்
நஞ்சு என்பது போதிய அளவில் உட்கொள்ளப்படின் கெடுதலை அல்லது மரணத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு பதார்த்தமாகும்.
நஞ்சு ஏறலுக்கான வழிகாட்டியானது நஞ்சு உடம்பில் எப்படி ஏறியது என்பதைப் பொறுத்துள்ளது.
எளிமையான தடுப்பு முறைகள் விபரீதங்களை தடைசெய்யும்
அபாயகரமான இரசாயனப் பொருட்களையும் மருந்துகளையும் எட்டாத இடத்தில் வைக்கவும்
நச்சுப் பதார்த்தங்களை மூலக் கொள்கலனிலிருந்து வேறொன்றுக்கு விசேடமாக பழைய குளிர்பான போத்தல்களுக்கு மாற்ற வேண்டாம்.
நோக்கம்
உடல் முழுவதும் நஞ்சு செல்வதை தடுப்பதற்கும் தேவையான மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளவும்.
சுவாசிக்கப்படும் நஞ்சு
பரிகாரம்
பாதிப்புற்றவரை சுத்தமான காற்றுள்ள இடத்துக்கு மாற்றவும் அல்லது உங்களுக்கு ஆபத்து ஏற்படாதவாறு பார்த்துக்கொண்டு யன்னல்களை திறந்துவிடவும்
ஆபத்து, பதிலளித்தல், சுவாசப்பாதை, சுவாசம், குருதிச்சுற்றோட்டம் என்பவற்றை மதிப்பிடுசெய்யவும்.
பாதிப்புற்றவர் சுவாசித்தாலும் சுயநினைவற்றிருந்தால் அவரை தேறும் நிலையில் வைத்து பதிலளித்தல், சுவாசப்பாதை, சுவாசம், குருதிச்சுற்றோட்டம் என்பவற்றை அவதானிக்கவும்.
பாதிப்புற்றவர் சுவாசிப்பதை நிறுத்திவிட்டால் மீளுயிர்ப்பித்தலை ஆரம்பிக்கவும் சுவாசமும் குருதிச் சுற்றோட்டமும் இல்லாவிடில் இ.நு.மீ ஆரம்பிக்கவும்
மருத்துவ உதவி கோரவும்
வாயினால் உட்கொள்ளப்பட்ட விஷம்
செயற்பாடுகள்
ஆபத்த, பதிலளித்தல், சுவாசப்பாதை, சுவாசம், குருதிச்சுற்றோட்டம், என்பவற்றை மதிப்பிடுசெய்யவும்.
பாதிப்புற்றவர் சுயநினைவற்றிருந்தால் அவரை தேறும் நிலையில் வைத்து பதிலளித்தல், சுவாசப்பாதை, சுவாசம், குருதிச்சுற்றோட்டம் என்பவற்றை அவதானிக்கவும் மீளுயிர்ப்பிப்பதற்கு தயாராக இருக்கவும்.
பாதிப்புற்றவர் சுயநினைவூடன் இருந்தாலும் அவரை தேறும் நிலையில் வைத்து என்ன நஞ்சு உட்கொள்ளப்பட்டது என்பதைக் கண்டறிய முயலவும் வாந்தி எடுக்கச் செய்ய வேண்டாம்.
பாதிப்புற்றவர் காரமான நஞ்சை உட்கொண்டிருந்தால் அடிக்கடி நீர் அல்லது நீர் கிடைக்காவிட்டால் பால் பருக்கவும். பாதிப்புற்றவருக்கு மீளுயிர்ப்புச் சுவாசம் தேவைப்படின் உங்களை பாதுகாப்பதற்கு அவசர நிலைமையில் துவாரம் இடப்பட்ட பையொன்று வாயைப் பாதுகாப்பதற்குப் போதுமானதாகும்.
பாதிப்புற்றவர் வாந்தி எடுத்தால் சிறிதளவை மருத்துவப் பரிசீலனைக்கு எடுத்துவைக்கவும்.
சருமத்தில் படுதல்
பரிகாரம்
ஆபத்து, பதிலளித்தல், சுவாசப்பாதை, சுவாசம், குருதிச்சுற்றோட்டம் என்பவற்றை மதிப்பீடுசெய்யவும்.
பாதிக்கப்பட்ட பகுதியை வெறுங் கையால் தொடவேண்டாம்.
தாராளமான நீரைக்கொண்டு நஞ்சைக் கழுவி விடவும். உங்கள்மீது அல்லது பாதிப்புற்றவரின் கண்களிலும் வாயிலும் மூக்கிலும் தெளிப்பதைக் தவிர்க்கவும். இரசாயனப் பொருள் விரிவை ஏற்படுத்தினால் இருபது நிமிடங்களுக்காவது நீரினால் கழுவிக்கொண்டே இருத்தல் வேண்டும். அதே நீரை திரும்பவும் பயன்படுத்த வேண்டாம்.
கூடுமானவிடத்தும் அவ்வாறு செய்வது பாதுகாப்பானதாக இருக்குமிடத்தும் (கையூறை பாவித்து) நஞ்சு படிந்த ஆடையைக் கழற்றி விடவும் பாதிப்புற்றவரின் அந்தரங்கத்தையும் மானத்தையும் பாதுகாக்க முயலவும்.
பாதிப்புற்றவர் சுயநினைவற்றிருந்தால் அவரை தேறும் நிலையில் வைத்து பதிலளித்தல், சுவாசப்பாதை, சுவாசம் குருதிச்சுறறோட்டம் என்பவற்றை அவதானிக்கவும். பாதிக்கப்பட்ட பகுதியை தொடர்ந்து நீரினால் கழுவவும். மீளுயிர்ப்பித்தல் அளிக்கத் தயாராகயிருக்கவும். நஞ்சு முகத்தில் பட்டிருந்தால் தடையொன்றைப் பாவிக்கவும்
ஊசி மூலம் ஏற்பட்ட நஞ்சு
பரிகாரம்
ஆபத்து, பதிலளித்தல், சுவாசப்பாதை, சுவாசம, குருதிச்சுற்றோட்டம் என்பவற்றை மதிப்பிடுசெய்யவும்.
பாதிப்புற்றவர் சுயநினைவற்றிருந்தால் அவரை தேறும் நிலையில் வைத்து பதிலளித்தல், சுவாசப்பாதை, சுவாசம், குருதிச்சுற்றோட்டம் என்பவற்றை அவதானிக்கவும் மீளுயிர்ப்பித்தல் அளிக்க தயாராயிருக்கவும்.
பாதிப்புற்றவர் சுயநினைவுடன் இருந்தாலும் தேறும் நிலையில் வைத்து அமைதியுடன் இருக்கச் செய்யவும். பதிலளித்தல, சுவாசப்பாதை, சுவாசம், குருதிச்சுற்றோட்டம் என்பவற்றை அவதானிக்கவும்.
முடியுமானால் உடலில் எற்றப்பட்ட பதார்த்தத்தை இனம் காணவும். சிறிஞ்சி அல்லது பதார்த்தத்தின் மாதிரி என்பவற்றை மருத்துவ சேவையின் பரிசீலனைக்காக எடுத்து வைக்கவும். சிறிஞ்சி முதலியவற்றில் குருதி படிந்திருக்க கூடுமாதலால் இவற்றை கையாளும்போது மிகவும் கவனமாயிருக்கவும்.


