தேறும் நிலை
VIDEO 5 - தேறும் நிலை
பின்னணித்தகவல்
உணர்விழந்த ஒருவரின் சுவாசப்பாதை தடைப்பட்டிருப்பதால் அவர் இறக்கக்கூடிய ஆபத்துண்டு. பெரும்பாலும் அவரைத் தேறும் நிலைக்குத் திருப்பி வைப்பதன்மூலம் இதனைத் தடுக்கலாம். பாதிப்புற்றவரை தேறும் நிலைமைக்குத் திருப்பிவிடுவதற்கு முன்னர் பூர்வாங்க மதிப்பீட்டின் பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு மறக்க வேண்டாம்.
குறிக்கோள்
பாதிப்புற்றவரின் சுவாசப்பாதையை பராமரித்தல்
தேறும்நிலை
பின்வரும் படிமுறைகளைப் பயன்படுத்தி பாதிப்புற்றவரைத் தேறும் நிலையில் வைக்கவும்.
· பாதிப்புற்வரின் பக்கத்தில் முடியுமானவரை அவருக்கு நெருக்கமாக முழந்தாழிடவும்.
· நாடியை உயர்த்தியும் தலையை மெதுவாகப் பின்புறமாக சாய்த்தும் சுவாசப்பாதையை திறந்துவிடவும். .
· பார்த்தல், கேட்டல், உணர்த்தல் மூலம் சாதாரண சுவாசத்தை 10 செக்கன் பரிசீலிக்கவும்.
· கடும் குருதிக் கசிவையும் பாரிய காயங்களையும் கண்டுபிடிப்பதற்கு விரைவாக உடலைப் பரிசோதிக்கவும்.
· உங்களுக்கு அருகிலுள்ள கையை வெளிப்புறமாக நீட்டிவைத்து உள்ளங்கையை மேல் நோக்கி வைக்கவும்.
· உங்களுக்கு அப்பாலுள்ள கையை மார்புக்கு மேலாக கொண்டுவந்து கையின் பின்புறத்தை பாதிப்பற்றவரின் ( உங்களுக்கு அருகிலுள்ள) கன்னத்திற்கு எதிராக வைத்து உங்கள் கையால் பிடித்துகொள்ளவும்.
· உங்கள் மற்ற கையைக்கொண்டு உங்களுக்கு அப்பாலுள்ள தொடையை முழங்காலுக்கு சற்று மேலே பிடித்து முழங்காலை மேலே இழுக்கவும். பாதம் நேராக நிலத்தில் இருத்தல் வேண்டும்.
உங்கள் கையை கன்னத்தில் வைத்து அமத்தியவாறே தலைக்கும் கழுத்திற்கும் ஆதாரமாகக் கொடுத்து முழங்காலுக்கு மேலால் உங்கள் கையை நோயாளியின் வெளிப்புறமாக உள்ள தொடையின்கீழ் கையை வைத்து முழங்காலை கீழ்நோக்கி உங்கள் பக்கமாக அழுத்தி பாதிப்புற்றவரை உங்கள் பக்கத்திற்கு புரட்டவும்.
· சுவாசப்பாதையை திறந்து விடுவதற்கு தலையை மெதுவாகப் பின்புறமாக சரிக்கவும்.. அவசியமானால் தலைக்கு ஆதாரமாக கன்னத்திற்குக் கீழுள்ள கையை சரிசெய்யவும். வாய் நிலத்தை நோக்கியவாறு இருத்தல் வேண்டும்.
· இடுப்பும் முழங்காலும் செங்குத்தாக இருப்பதற்கு காலின் மேற்பகுதியை இடுப்பை நோக்கி கொண்டுவரவும்.
· சாதாரண சுவாசத்தை பரீட்சிக்கவும்
· பாதிப்புற்றவரின் முதுகில் காயங்கள் எவையும் உண்டா எனப் பார்க்கவும்.
உணர்விழந்த எந்தவொரு நோயாளியும் மருத்துவமனைக்கு அனுப்பப்படுதல் வேண்டும். உதவி கேட்டு எவரையும் அனுப்பாவிட்டால் இப்பொழுது அம்பியூலன்ஸ் வண்டியை அழைப்பதற்கு அனுப்பவும்.
நீங்கள் தனியாக இருப்பின் உதவி கேட்டுச் செல்வதற்கு பாதிப்புற்றவரை விட்டுச் செல்ல நேரிடும்.
இந்த எளிமையான நடவடிக்கை எண்ணற்ற உயிர்களை காக்கும்.
தனியாக இருப்பின்
அம்பியூலன்ஸ் கிடைக்காவிட்டால் பாதிப்புற்றவரை தேறும் நிலையில் ஏற்றிச் செல்லக்கூடிய ஒரு வாகனத்தை தேர்ந்தெடுக்கவும்.
முச்சக்கரவண்டியை பயன்படுத்த வேண்டாம்.
|
|
![]() |
|
![]() |
|
![]() |
|
![]() |
|
![]() |
|
![]() |
|
![]() |
|
















