சம்வத்தை கையாளுதல் பாதிப்புற்றவரைக் கையாளுதல்

பின்னணித் தகவல்
முதலுதவியாளரிடம் எதிர்பார்க்கப்படுவதென்ன?

உங்களிடமிருந்து நீங்கள் அளவுக்கதிகமாக எதிர்பாராதிருப்பது முக்கியம். எந்தவொரு நிலைமையிலும் உங்களால் முடிந்ததை மட்டுமே நீங்கள் செய்யலாம். முழுமையாகப் பயிற்சிபெற்ற ஒரு மருத்துவராலும் சகல வசதிகளையும் கொண்ட நவீன மருத்துவ மனையினாலும் சாதிக்க முடியாத காரியங்களும் உண்டு. நீங்கள் புதுமைகள் செய்யுமாறும் அல்லது உங்களுக்க ஆபத்து நேரக்கூடிய விடயங்களைச் செய்யுமாறும் எதிர்பார்க்கப்படுவதில்லை. முதலுதவியாளர் என்ற வகையில் பின்வருவதனை எத்தனிப்பதே உங்கள் கடமை என்பதை நினைவிற் கொள்ளவும்.

உயிரைக் காப்பாற்றுதல் உங்கள் உயிர் உட்பட

தாக்கங்களை மட்டுப்படுத்துதல் பாதிப்புற்றவரின் நிலைமையின்

ஊக்குவித்தல் பாதிக்கப்பட்டவர் குணடமடைவதை

இதற்கு நீங்கள் செய்யவேண்டிய முதல் வேலை சம்பவத்தை முகாமை செய்தல் ஆகும்.

 


வீடியோ 1 - பாதிப்புற்றவரின் நிலைமையை அறிந்துகொள்ளல்


வீடியோ 2 - பாதிப்புற்றவரிடம் கேட்டு அறிந்துகொள்ளல்




வீடியோ 3 - உதவிக்கு யாரையாவது அழைத்தல்