அதிர்ச்சி
அதிர்ச்சிக்கான அறிகுறிகளும் பரிகாரமும்
பின்னணித் தகவல்
பாதிப்புற்றவரின் சருமம் வெளிறிப்போய், சாம்பல் நிறமாகவும் ஈரமாகவும் நடுக்கமுடையதாகவும் இருக்கலாம்.
பலவீனமாகும் வேகமான நாடித்துடிப்பு
வேகமான தாழ்ந்த சுவாசம்( திணறுதல்)
பலவீனமும் தலைச்சுற்றும் இருக்கும்.
சுகவீனமுற்று வாந்தி எடுக்கலாம்.
தாகமாயிருப்பர்
பதற்றமும் அமைதியற்றும் இருப்பர். சிலவேளை ஆத்திரம் கொள்வர்.
காற்றுக்காகத் தடுமாறுவார். (காற்றுப் பசி)
சுயநினைவு குறைந்து மூர்ச்சித்துப்போவர்.
இறுதியாக மூச்சு தடைப்பட்டு இருதயமும் நின்றுவிடும்.
குறிக்கோள்
அதிர்ச்சிக்கான ஏதேனும் வெளிப்படையான காரணத்திற்குப் பரிகாரம் செய்தல்
மூளைக்கும் இருதயத்திற்கும் சுவாசப் பைக்கும் குருதிச்சுற்றோட்டத்தை ஏற்படுத்தவும்
அவசரமான மருத்துவ உதவி பெறுதல்
பரிகாரம்
எல்லா அவசர நிலைமைகளிலும்போல ஆபத்து, பதிலளித்தல், சுவாசப்பாதை, சுவாசம், குருதிச்சுற்றோட்டம் என்பவற்றை மதிப்பீடுசெய்து முன்னுரிமைகளுக்கு ஏற்ப சிகிச்சையளிக்கவும். இது அதிர்ச்சிக்கான பாரிகாரத்தை ஆரம்பிக்கும்.
காயங்கள் இருக்குமானால் பாதிப்புற்றவரைக் கீழே கிடத்தி தலையைத் தாழ்த்தியும் (தலையணையை பாவிக்க வேண்டாம்) கால்களை மெதுவாக உயர்த்தியும் வைக்கவும்.
இது மூளை போன்ற முக்கியமான உறுப்புகளுக்கு குருதிச்சுற்றோட்டத்தை பேணும்.
பாதிப்புற்றவரை கூடியவரை அசையாமலும் அமைதியாகவும் வைத்திருக்கவும்.
கழுத்திலும் மார்பிலும் இடுப்பிலும் இறுக்கமான ஆடைகளை தளர்த்திவிடவும்
பாதிப்புற்றவரின் கீழால் கம்பளி ஒன்றை வைத்து வேறொரு கம்பளியால் போர்த்திவிடவும். பாதிப்புற்றவரின்மீது கம்பளிகளை அல்லது மேலங்கிகளை அடுக்கி வைக்க முயல வேண்டாம். இது கெடுதல் விளைவிக்கலாம்.
உதவி கோரவும் ( மருத்துவ உதவி அல்லது போக்குவரத்து)
பாதிப்புற்றவருக்குக் குடிக்கவோ சாப்பிடவோ எதனையும் கொடுக்க வேண்டாம். புகை பிடிக்கவும் வேண்டாம். பாதிப்புற்றவர் தாகமாயிருப்பதாக கூறினால் அவரை உதடுகளை நனைக்கவும்.
பேனா, கடதாசி இருப்பின் சுவாசத்தையும் நாடித்துடிப்பபையும் சுயநினைவின் மட்டங்களையும் குறித்து வைக்கவும்.
அவர் மூர்ச்சித்துப்போனால் அவரை தேறும் நிலையில் வைக்கவும்
நீங்கள் கண்டறிந்த விடயங்களையும் உங்கள் நடவடிக்கைகளையும் மருத்துவ அதிகாரிகளுக்கு வழங்கவும்.
நீங்கள் அவருக்கு மீளுயிர்ப்பித்தல் அளிக்க வேண்டியிருக்கலாம்.
இவற்றைச் செய்ய வேண்டாம்.
பாதிப்புற்றவரை அசைத்தல் ( ஆபத்தை தவிர்ப்பதற்காகவாயிருந்தாலன்றி)
நேரடிச்சூடு கொடுத்தல்
பாதிப்புற்றவரை தனியாக விட்டுவைத்தல், நீங்கள் உதவி கேட்டுச் செல்ல அல்லது வேறு நோளிகளை கவனிக்க வேண்டியிருந்தாலன்றி
பாதிப்புற்றவரை சாப்பிடவோ குடிக்கவோ அனுமதித்தல்
பாதிப்புற்றவரை புகைபிடிக்க அனுமதித்தல்
குறிப்பு
அதிர்ச்சியின் காரணத்தை பொறுத்து நோயாளியின் நிலை வேறுபடலாம்.
வயிற்றுக் காயம்
| தலைக்காயம் |
| தொய்வு |
| மார்பில் காயம், மாரடைப்பு |







