இழையக் காயங்கள்

மென் இழையத்தில் காயங்களின் அறிகுறிகளும் அடையாளங்களும்

பின்னணித் தகவல்
மென் இழையங்களிலான காயங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்

தசைகளும் மூட்டுகளும்

நரம்புப் பிடிப்பு: இது தசைக்கு தசை நாருக்கு ஏற்படும் காயமாகும். தசைகள் அசைவுகளுக்குத் தேவையான சக்தியைத் தரும் கலங்களினால் ஆனவை. தசை நார்கள் தசைகளை எலும்புகளுடன் இணைக்கும் நார்த்தன்மையுள்ள ஒரு நூலாகும்.

சுளுக்கு இது தசைநாரில் ஏற்படும் காயமாகும். தசை நார் மூட்டுக்களுக்கு ஆதாரம் கொடுக்கும் சக்திமிக்க நார்களையுடைய இழையமாகும்.

நரம்புப் பிடிப்பு உடம்பின் எந்த இடத்திலும் ஏற்படக்கூடியதும் நோவைத் தரக்கூடியதுமான ஒரு காயமாகும். விளையாட்டின்போது ஏற்படும் காயத்தைப்போல் சடுதியாகவும் ஆயத்தம் செய்யப்படாமலும் தசைகளைப் பயன்படுத்தும்போது இது ஏற்படுகின்றது. சடுதியாக திரும்பும்போது அல்லது நீட்டும்போதும் இது ஏற்படுகின்றது. ஒரு மூட்டின்போது சுளுக்கு ஏற்படுகின்றது. சுளுக்குக்கும் முறிவுக்கும் இடையிலான வித்தியாசத்தைக் கூறுவது கடினம். மூட்டுகளுக்குக் கொடுக்கப்படும் அளவுக்கதிமான அழுத்தத்தினால் “மூட்டு விலகல்” ஏற்படுகின்றது. அவ்வாறு ஏற்படும்போது மூட்டுகள் விலகியிருப்பது வெளிப்படையாகத் தோன்றும். கடுமையான வலியும் இருக்கும்.

அறிகுறிகளும் அடையாளங்களும்
மென் இழையங்களுக்கான காயத்தை கண்டுகொள்வதற்கான அம்சங்கள் எலும்பு முறிவுக்கான அம்சங்களைப் போன்றதே. காயமொன்று எலும்பு முறிவா என்று நிச்சயமாக தெரியாவிட்டால் எலும்பு முறிவுக்குப் போன்று சிகிச்சையளிக்கவும்.

குறிக்கோள்கள்
வலியையும் வீக்கத்தையும் குறைத்தல்
மருத்துவ உதவி கோருதல்

பரிகாரம்
ஆபத்து, பதிலளித்தல், சுவாசப்பாதை, சுவாசம், குருதிச் சுற்றோட்டம் என்பவற்றை மதிப்பீடு செய்யவும்.

பாதிப்புற்றவறைக் கீழே இருத்தவும் அல்லது கிடத்தவும்

பாதிப்புற்ற அவயத்தை ஒரே நிலையில் நேராக வைத்து ஆதாரம் கொடுக்கவும். காயம் அவயம் ஒன்றில் இருப்பின் அதனை உயர்த்தி வைக்கவும்.

காயம் அண்மையில் ஏற்பட்டதாயின் அப்பகுதியில் ஐஸ் பையை வைக்கவும் அல்லது குளிர் ஒத்தடம் வைக்கவும். மு.கு ஐஸ் பரவியிருப்பதால் அது ஒரு துவாயில் சுற்றப்பட்டிருத்தல் வேண்டும். ஏனெனில் சருமத்தில் பட்டால் சருமம் எரிவுக்குள்ளாகும்.

காயம் ஒரு அவயத்தில் இருப்பின் ஐஸ் பொதியை ஒரு துணியில் சுற்றி சுழன்று விடாதவாறு நன்றாகக் கட்டி விடவும்.

அவயத்தை உயர்த்தி வைத்து கட்டுத் துணி இறுக்கமாக இருக்கின்றதா என பத்து நிமிடங்களுக்கு ஒரு தடைவ கவனிக்கவும். கட்டு இறுக்கமாக இருந்தால் வலியும் வீக்கமும் அதிகரிக்கும்,காயத்துக்கு அப்பால் கூசுதல் ஏற்படும் அத்துடன் சருமம் நிறம் மாறும்.

பரிகாரத்திற்கு பலன் கிடைக்காவிட்டால் அதாவது 15-20 நிமிடங்களின் பின்னரும் வலி குறையாவிட்டால் அல்லது காயத்தின் பாரதூரமான தன்மை பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால் அவரை மருத்துவரிடம் மென்மையான இழையத்தின் காயத்திற்கான பரிகாரத்தை பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம்
ஓய்வு
ஐஸ்
அழுத்தம்
மேலே உயர்த்தி வைத்தல்

எலும்பு முறிவுகளுக்கான அறிகுறிகளும் அடையாளங்களும் பரிகாரமும்

பின்னணித் தகவல்

எலும்பு முறிவு என்பது எலும்பின் முறிவு அல்லது வெடிப்பு ஆகும். ஒரு எலும்பு முறிவதற்குப் பலமான தாக்கம் தேவை. ஆனால் வயோதிபரில் அல்லது நோயொன்றில் பீடிக்கப்பட்டவரில்

இலேசான தாக்கத்திலும் எலும்பு முறியக்கூடும்.

எலும்பு முறிவு பல்வேறு விதங்களில் ஏற்படலாம்.

உடைதல் அல்லது வெடித்தல்
எலும்புக்கு ஊடாக நேராக உடைதல்
திரும்புதல் அல்லது பிளவு
சிதறுதல் அல்லது நொறுங்குதல்
குருதி நாளங்களும் இழையங்களும் சேதமடைதல்

எலும்பொன்று முறியும்போது அதனைச் சுற்றியுள்ள இழையங்களும் சேதப்படும். சேதத்தின் அளவு காயத்தில் ஏற்பட்ட தாக்கத்தின் அளவைப் பொறுத்ததாகும். சாதாரண எலும்பு முறிவில் சுற்றியுள்ள இழையங்களுக்கான சேதம் சிறிதாக இருக்கலாம் ஆனால் எலும்பின் முனைகள் சருமத்தை குத்தித் துளைக்கக்கூடும். பாரிய எலும்பு முறிவுகளில் எலும்பின் முனைகள் உள் உறுப்புக்களை அல்லது குருதி நாளங்களை சேதப்படுத்தலாம்.

அறிகுறிகளும் அடையாளங்களும்

அண்மைய அடி அல்லது விழுகை பற்றிய வரலாறு
காயப்பட்ட இடத்தில் உடையும் சத்தம்
பாதிக்கப்பட்ட பகுதியை அசைப்பதில் சிரமம்
காயப்பட்ட இடத்தில் அதிக வலியும் மென்மையாக காணப்படுதலும்
உரு மாறியிருத்தல்
வீக்கம் அல்லது உராய்வு
காயம் பாரதூரமானதாயிருத்தல் அதிர்ச்சியின் அறிகுறி

மூடிய எலும்பு முறிவுக்கான பரிகாரம் மிகவும் எளிமையானது. அது நேராக
வைத்தலும் ஆதாரம் கொடுத்தலும் எனப்படும்.

குறிக்கோள்

காயப்பட்ட இடத்தில் அசைவைத் தவிர்க்கவும்

சௌகரியமான ஆதாரத்துடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல ஒழுங்கு செய்யவும்.

பரிகாரம்

ஆபத்து, பதிலளித்தல், சுவாசப்பாதை, சுவாசம், குருதிச் சுறறோட்டம் என்பவற்றை மதிப்பீடு செய்யவும்
பாதிப்புற்றவரை அசையாதிருக்குமாறு எச்சரிக்கவும்
பூர்வாங்க மதிப்பீட்டிலிருந்து எழும் எவையேனும் முன்னுரிமைகளுக்குப் பரிகாரம் செய்யவும்
காயம் மேல் அவயமொன்றில் இருந்தால் பாதிப்புற்றவர் மிகவும் சௌகரியமான முறையில் ஆதாரம் அளிப்பார். அதனைவிட மேலதிகமாக உங்களால் எதுவுமே செய்ய முடியாதிருக்கலாம்.

தனியாக இருப்பின்
பாதிப்புற்றவரை மருத்துவ மனைக்கு கொண்டு செல்கையில் அவரை வைத்திருக்க வேண்டிய சரியான நிலையைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். இதற்கு வசதியான ஒரு வாகனத்தை தேர்ந்தெடுக்கவும்.

முச்சக்கர வண்டியைப் பயன்படுத்த வேண்டாம்.

கழுத்துப்பட்டை எலும்பு
உயர்த்தி வைக்கும் கழுத்துப் பட்டியை கட்டி அவயத்திற்கும் உடம்பிற்கும் இடையில் ஏதேனும் பந்தனம் ஒன்றை வைக்கவும். கையையும் உடம்பையும் சுற்றி அகன்ற கட்டுத் துணியால் ஆதாரம் கொடுக்கவும்.

கை
பாதிக்கப்பட்ட பாகத்தை சுற்றி பந்தனத் துணி ஒன்றை வைத்து கழுத்தோடு சேர்த்து பட்டியொன்றைக் கட்டவும். பாதிக்கப்பட்ட பாகத்தை தவிர்த்து அகன்ற கட்டுத்துணியால் ஆதாரம் கொடுக்கவும்.

கால்கள்
காயம் அவயத்தின் அடிப்பாகத்தில் இருந்தால் காயத்திற்கு மேலும் கீழும் உங்கள் கைகளால் ஆதாரம் கொடுக்கவும்.

தனியாக இருந்தால்

பாதிப்புற்றவரை ஏற்றிச் செல்ல வேண்டியிருந்தால்

காயப்படாத காலை மெதுவாக காயப்பட்ட காலின் அருகில் வைக்கவும். கால்களுக்கிடையில் துணி மூட்டை ஒன்றை வைக்கவும். பாதங்களையும் கணுக்காலையும் சுற்றி இலக்கம் எட்டு என்னும் வடிவத்திலான கட்டு போடவும் பின்னர் முழங்கால்களைச் சுற்றி முறிவுக்கு கீழ் ஒன்றும் முறிவுக்கு மேல் ஒன்றுமாக அகன்ற கட்டுத்துணியால் கட்டுப்போடவும். பாதிப்புற்றவரை நீண்ட தூரம் அல்லது கரடுமுரடான பாதையில் கொண்டு செல்ல வேண்டியிருந்தால் துணியால் ஏற்பட்ட மேலதிக ஆதாரம் ( கட்டை வைத்து) தேவைப்படலாம். பாதிப்புற்றவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கையில் சரியான நிலையைப்பற்றிச் சிந்திக்க வேண்டியிருக்கலாம். இதற்கு வசதியான ஒரு வாகனத்தைத்
தேர்ந்தெடுக்கவும்.

முச்சக்கர வண்டி பயன்படுத்த வேண்டாம்.

 

தாடை

தாடை காயப்பட்டால் தாடையின் கீழ் மென்மையான பந்தனத் துணியொன்றை வைத்து தனக்கு ஆதாரம் கொடுத்துக் கொள்ளுமாறு பாதிப்புற்றவரிடம் கூறவும். தலையை உயர்த்தி உட்கார வைக்கவும்.

மார்பெலும்புகள்

மார்பெலும்புகள் சம்பந்தப்பட்டிருப்பின் பாதிப்புற்றவரை அவருக்கு மிகவும் சௌகரியமான நிலையில் இருத்தவும். காயப்பட்ட பகுதிக்கு தனது கையால் ஆதாரம் கொடுத்துக்கொள்ளுமாறு கூறவும்.( காயப்பட்ட பகுதிக்கு சாய்ந்து வைக்க முடியுமாயின் நல்லது)

தனியாக இருப்பின்

பாதிக்கப்பட்ட பக்கத்திலுள்ள கையை உயர்த்தி கழுத்துடன் சேர்த்து கட்டுப்போடப்பட்டிருந்தால் பாதிப்புற்றவருக்கு சௌகரியமாக இருக்கும். பாதிப்புற்றவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கையில் சரியான நிலையைப் பற்றிச் சிந்திக்க வேண்டியிருக்கலாம். இதற்கு வசதியான ஒரு வாகனத்தை தேர்ந்தெடுக்கவும்.

முச்சக்கர வண்டியை பயன்படுத்த வேண்டாம்.

எலும்பு முறிவுக்கு உட்பட்டு சுயநினைவற்றிருக்கும் நோயாளி ஒருவரை தேறும் நிலையில் வைத்துக்கொண்டு செல்வதையிட்டு பலர் அச்சம் கொள்கின்றனர். எனினும் எலும்பு முறிவை அல்லது முள்ளந்தண்டுக்கு காயத்தைவிட சுவாசப்பாதை தடைப்படுவதால் இறக்கக்கூடிய அல்லது நிரந்தரமாக ஊனமடையக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம். சுய நினைவற்றிருப்பவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக நீங்கள் சந்தேகப்படின் காயத்திற்கு கூடியவரை ஆதாரம் கொடுத்து மிகவும் கவனமாக அவரை எடுத்துச் செல்லவும்.

பாதிப்புற்றவருக்குக் கழுத்தில் அல்லது முள்ளந்தண்டில் காயம் ஏற்பட்டிருக்கும் என நீங்கள் சந்தேகப்படின் அவரை அவர் காணப்பட்ட நிலையிலேயே வைத்து கழுத்துக்கும் தோள்களுக்கும் ஆதாரமொன்று கொடுக்குமாறு அருகிலுள்ள ஒருவரிடம் கூறவும்.

அவரை சரியான நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வது பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டியிருக்கும். பயிற்சிபெற்ற அவசரகால மீட்புப் பணியாளரினால் அல்லது தீயணைப்புப் படையினரினாலேயே அவர் கொண்டு செல்லப்படுதல் வேண்டும்.

முச்சக்கர வண்டியை பயன்படுத்த வேண்டாம்.

 

திறந்த எலும்புமுறிவுகள்

பின்னணித் தகவல்

திறந்த எலும்பு முறிவானது முறிந்த எலும்புடன் காயம் ஒன்றும் சோ்ந்ததாகும். சிலவேளை எலும்பு தென்படும் அத்துடன் தசைகளும் தசை நார்களும் எலும்பை சருமத்தின் உள்ளே இழுத்து வைத்திருக்கக்கூடும்.

அநேகமாக மூடிய எலும்பு முறிவுக்குப் போன்றே திறந்த எலும்பு முறிவுக்கும் பரிகாரம் செய்யப்படும். எலும்பு தசைகளை கிழித்துக்கொண்டு வெளியே வந்திருந்தால் மாத்திரம் காயத்தில் பிற பொருள் குத்தியிருந்தால் செய்வது போன்று செய்ய வேண்டும். ( முடியுமாயின் வெளியில் வந்துள்ள எலும்பை நோய்க் கிருமிகளற்ற துணியால் மூடி வைக்கவும்)

குறிக்கோள்

குருதி விரயமாவதையும் முறிவு ஏற்பட்ட இடத்தில் அசைவையும் தடுத்தல்
சௌகரியமான ஆதாரத்தைப் பேணிக்கொண்டு மருத்துவ உதவிக்குக் கொண்டு செல்லல்

பரிகாரம்

ஆபத்து, பதிலளித்தல்,சுவாசப்பாதை, சுவாசம், குருதிச்சுற்றோட்டம் என்பவற்றை மதிப்பிடுசெய்யவும்.

அசையாதிருக்கும்படி பாதிப்புற்றவருக்கு எச்சரிக்கை விடுக்கவும்
பூர்வாங்க மதிப்பீட்டிலிருந்து ஏதேனும் முன்னுரிமைக்குப் பரிகாரம் செய்யவும்

காயத்திற்குப் பக்கத்தில் அழுத்தம் கொடுப்பதன்மூலம் எலும்பு முறிவிலிருந்து குருதிப் பெருக்கத்தை கட்டுப்படுத்தவும்

சுத்தமான கட்டுத்துணியால் காயத்தை மூடி எலும்பு துருத்திக்கொண்டிருந்தால் இரு பக்கங்களிலும் பந்தனக் துணி வைக்கவும்.
கட்டையும் மெத்தையையும் துணியால் கட்டி இறுக்கமாக வைக்கவும்
நேராக வைத்து முன்னர் விவரித்ததுபோல் ஆதாரம் கொடுக்கவும்

மூட்டு விலகல்

எலும்பு முறிவுகளுக்குப் போல் பரிகாரம் செய்யவும். நேராக வைத்து ஆதாரம் கொடுக்கவும். விலகிய மூட்டைப் பொருத்த முயல வேண்டாம்.

தனியாக இருப்பின்

பாதிப்புற்றவரை ஏற்றிச் செல்ல வேண்டியிருந்தால்

முன்னர் விவரிக்கப்பட்டது போல் அவயவத்தின் மேல் அல்லது கீழே பரிகாரம் செய்யவும். (பொருத்தமானவாறு கழுத்துப்பட்டி அத்துடன் அல்லது கட்டுத்துணி)