உடற்பரிசோதனை

உடற்பரிசோதனை ( உச்சியிலிருந்து உள்ளங்கால்வரை)


பின்னணித்தகவல்


பாதிப்புற்றவருக்கு நீங்கள் பூர்வாங்க அவசர சிகிச்சை அளித்தபின்னர் அவருக்கு என்ன
நடந்துள்ளது என்பதை அல்லது வேறு எவையேனும் காயங்கள் உள்ளனவா என்பதைக் கண்டுபிடிப்பதற்கான வேறு எவையேனும் அடையாளங்களை தேடிப் பார்க்கவும்.
பாதிப்புற்றவரை ஒழுங்குமுறையில் சோதிக்கும் வழிமுறை இரண்டாம் நிலை மதிப்பீடு ( உடற்சோதனை) என அழைக்கப்படும்.
எல்லா முதலுதவி நடைமுறைகளையும் போல் எளிமையான ஒரு நடைமுறையை நாம் பின்பற்றலாம். இரண்டாம் நிலை மதீப்பீடொன்றை ( உடற்சோதனை) மேற்கொள்வதற்கு உங்கள் இரண்டு கைகளையும் பயன்படுத்தி உடம்பின் இரு பக்கங்களினதும் ஒற்றுமை வேற்றுமைகளைக் கண்டறிதல் வேண்டும். பாதிப்புற்றவரையும் அவர் இருக்கும் நிலையையும் அவதானிக்கவும். அவர் இருக்கும் நிலையைப் பார்க்கவும். பாதிப்புற்றவரிடமும் அயலில் நிற்பவர்களிடமும் கேள்விகள் கேட்டு கிடைக்கும் ஏதேனும் பதிலுக்கு கவனமாக செவிசாய்க்க மறக்க வேண்டாம். உங்களுக்கு வீசும் மணமும் சில துப்புகளை அளிக்கலாம். உதாரணமாக இரசாயனத்தின் மணம், மதுபானம் முதலியன.
நடைமுறைகளை விவரமாக அவதானிக்கவும். நீங்கள் பூர்வாங்க மதிப்பீட்டை ஏற்கனவே செய்திருப்பீர்கள். அவசியமானால் பாதிப்பற்றவரை தேறும் நிலையில் வைக்கவும். மூர்ச்சித்துள்ளவரான பாதிப்புற்றவர்மீதும் நீங்கள் இரண்டாம் நிலை மதீப்பீட்டை மேற்கொள்ளலாம்.


குறிக்கோள்
ஒழுங்குமுறையான அணுகுமுறையொன்றை பயன்படுத்தி பாதிப்புற்றவருக்கு இருக்கக்கூடிய வேறு எவையேனும் காயங்களை அல்லது பிரச்சினைகளை இனம் காணவும்.


இரண்டாம் நிலை மதிப்பீடு ( உடற்சோதனை அல்லது உச்சந்தலை முதல் உள்ளங்கால வரை மதிப்பீடு)

பாதிப்புற்றவர் மூர்ச்சித்திருந்தால் அவர் வாந்தி எடுத்து உங்களுக்கு தெரியாமலேயே சுவாசப்பாதை தடைப்பட்டு போகலாம். ஆதலால் இரண்டாம் நிலை மதீப்பீடு ஒன்றை ( உடற்சோதனை) மேற்கொள்ளுமுன் பாதிப்புற்றவரை தேறும் நிலையில் வைப்பது நன்மையுடையதாகும்.
பாதிப்புற்றவரின் தலையை வருடி இரத்தக் கசிவு, வீக்கம் அல்லது பிளவு எதுவும் இருக்கின்றதா என பார்க்கவும். இந்த நிலையில் பாதிப்புற்றவரின் தலையையும் கழுத்தையும் அசைக்க முயல வேண்டாம். முள்ளந்தண்டில் (கழுத்து) காயம் எதுவும் இருக்கக்கூடும்.
ஒவ்வொரு காதிலும் குருதி அல்லது திரவம் எதுவும் காணப்படுகின்றதா எனப் பார்க்கவும்.
கண்களைத் திறந்து கண்மணியின் அளவையும் வெளிச்சற்திற்கு அதன் எதிர்ச் செயற்பாட்டையும் அவதானிக்கவும். கண்கள் சமமாகவும் ஒரே அளவினதாகவும் ஒரே எதிர்ச்செயற்பாடுடையனவாவும் இருத்தல் வேண்டும்.
மூக்கில் குருதி அல்லது திரவம் உள்ளதா என பார்க்கவும்.
சுவாசத்தின் வீதத்தையும் ஆழத்தையும் அவதானிக்கவும். சுவாசத்தில் வழமைக்கு மாறான மனம் இருப்பின் அதனையும் அவதானிக்கவும்.
சுவாசப்பதையை அடைக்கக்கூடிய எதுவும் இருக்கின்றதா என வாயில் பார்க்கவும். பொய்ப் பற்கள் தளர்ந்திருந்தாலன்றி அவற்றை கழற்ற வேண்டாம். வாயினுள் காயங்கள் எவையும் உள்ளனவா எனப் பார்க்கவும்.

பாதிப்புற்றவரின் முகத்தில் காயங்கள் எவையும் இருக்கின்றனவா அல்லது இயற்கைக் கோடுகள் சீரற்றிருக்கின்றனவா என பார்க்கவும்.
சருமத்தின் நிறத்தையும் வெப்ப நிலையையும் அவதானிக்கவும்.
கழுத்தை சுற்றியுள்ள ஆடையை தளர்த்தவும். கழுத்து இழையங்களில் காயங்கள் அல்லது கழுத்து இழையங்களில் வீக்கம் இருக்கின்றனவா எனப்பார்க்கவும்.அத்துடன் பாதிப்புற்றவர் கழுத்தால் சுவாசிப்பவரா என்பதற்கான அடையாளங்களை அவதானிக்கவும். அவரது குரல்வளைக்கு கீழே கழுத்தில் (காயம் அல்லது துவாரம்) இருக்கக்கூடும்.
கழுத்து நாடியின் வேகத்தைச் சோதித்து குறித்துவைக்கவும். (பேனா, கடதாசி இருப்பின்)
அசைவை ஏற்படுத்தாமல் கையை மீண்டும் நெஞ்சில் வைத்து கழுத்தின் எலும்புகள், மண்டையின் அடிப்பாகம் என்பவற்றைத் தடவி சீரற்ற தன்மை, வீக்கம் அல்லது காயங்கள் எவையும் உள்ளனவா என உணரவும்.
உங்கள் கைகளை மார்பில் வைத்துத் தடவி சீரற்ற தன்மை, வீக்கம் அல்லது காயம் உள்ளதா என அவதானிக்கவும். பாதிப்புற்றவர் சுய நினைவுடன் இருந்தால் ஆழமான சுவாசமொன்றை எடுக்குமாறு கூறி மார்பில் ஒரே அளவான அசைவு இருக்கின்றதா எனக் கவனிக்கவும்.
உங்களை கைகளை மார்பின் மேல் பகுதியில் வைத்து மெதுவாக தோள் பக்கமாக நகர்த்தி வீக்கம் அல்லது சீரற்ற தன்மை எதுவும் உள்ளதா என அவதானிக்கவும்.
ஒவ்வொரு கையையும் மாறி மாறி சோதித்து வீக்கம் அல்லது சீரற்ற தன்மை எதுவும் தென்படுகின்றதா எனப் பார்க்கவும். பாதிப்புற்றவர் சுயநினைவுடன் இருப்பின் விரல்களையும் முழங்கைகளையும் நீட்டி மடக்குமாறு கூறவும்.
ஒவ்வொரு கையிலும் விரல்களிலும் காயங்கள் இருக்கின்றனவா எனப் பார்க்கவும்.
அநாவசியமான அசைவுகளை ஏற்படுத்தாமல் உங்கள் கைகளை முதுகின் நடுப்பகுதியில் வைத்து எலும்புகள் வழியாக மெதுவாக தடவி வீக்கம் அல்லது சீரற்ற தன்மை எதுவும் உள்ளதா எனப் பார்க்கவும்.
அடிவயிற்றில் காயம் அல்லது உராய்வுகள் எவையும் உள்ளனவா எனப் பார்த்து பாதிப்புற்றவரின் அடி வயிற்றில் உங்கள் கைகளை வைத்து மென்மையான தன்மையும் கடினமாக தன்மையையும் அவதானித்தவண்ணம் மெதுவாக கீழ்நோக்கி அழுத்தவும்.
உங்கள் கைகளை இடுப்பின் இரு பக்கங்களிலும் வைத்து இடுப்பெலும்மை மெதுவாக (புத்தகமொன்றை மூடுவதுபோல) நசுக்க முயலவும். அசைவில் ஏதேனும் வித்தியாசம் அல்லது சீரற்ற தன்மையை அவதானிக்கவும். பிறப்புறுப்பு அல்லது மலவாயில் பகுதியில் சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை அல்லது குருதிக்கசிவு இருக்கின்றதா எனப்பார்க்கவும்.
ஒவ்வொரு காலையும் மாறி மாறி காயங்களும் வீக்கமும் இருக்கின்றனவா எனப்பார்க்கவும். பாதிப்புற்றவர் சுயநினைவுடன் இருந்தால் ஒவ்வொரு முட்டையும் மாறி மாறி அசைக்குமாறு கூறவும்.
ஓவ்வொரு பாதத்திலும் கணுக்காலிலும் வீக்கம் அல்லது சீரற்ற தன்மை இருக்கின்றதா எனவும் அசைவையும் அவதானிக்கவும்.
நீங்கள் மதிப்பீட்டைப் பூர்த்திசெய்ததும் நீங்கள் கண்டறிந்த ஏதேனும் பிரச்சினைக்குப் பரிகாரம் செய்யவும். நீங்கள் கண்டுபிடித்த வழமைக்கு மாறான தன்மை எதுவுமிருப்பின் அதனையும் குறித்துவைக்கவும். இத்தகவல் அவசர சேவைகளுக்கு அல்லது மருத்துவமனைக்கு வழங்கப்படலாம்.