சற்று சிந்தியுங்கள் ....

உங்களுக்கு காயம் ஏற்பட்டாலோ, விபத்து நேர்ந்தாலோ உங்களுக்கு சுகமான, சந்தோஸம் நிறைந்த வாழ்க்கையோ அல்லது மரணம், அங்கவீனம் போன்றவை ஏற்படுவதை  தவிர்ப்பதற்கு முதலுவதவி செய்யக்கூடிய அறிவுள்ளவர்கள், உங்களை காப்பாற்றக்கூடிய திறன்படைத்தவர்கள் அருகிலிருப்பதை நீங்கள் விரும்புவதில்லையா?

உங்களுக்கு தேவையான  ஒருவர் அருகில் இருக்கும்போது அவருக்கு விபத்து நேரும்போதோ அல்லது நோய் ஏற்படும்போதோ அவரை காப்பாற்ற வேண்டிய அறிவு தமக்கு இருக்க வேண்டும் என்று எவரும் எண்ணுவதில்லையோ ? அப்படியில்லாவிட்டால் அவர் மரணமடைவதை தடுக்க முடியாமல் அமைதியாக அதனை பார்க்க வேண்டிய நிலையே உங்களுக்கு ஏற்படலாம்.

உங்களுக்கு முதலுதவி தெரிந்திருந்தால் அவரின் உயிரைகாப்பாற்ற உங்களால் முடியுமென்பதை அறிந்திருந்தபோதிலும் முதலுவதவிபற்றி தெரியாதிருந்தால் அவர் உங்களைவிட்டு பிரிய நேர்ந்தால் எவ்வாறு உணருவீர்கள்.?

இலங்கை வாழ் மக்களுக்காகவே இந்த இணையத்தளம் உள்ளது. இதன்மூலம் தன்னையும் பிறரையும் காப்பாற்றிக்கொள்வதற்கான அறிவு கிடைக்கின்றது.

இதனை கற்று தேறுவதற்கும் அறிவை பெற்றுக்கொள்வதற்கும் எமது பாடநெறியை தேர்ந்தெடுக்கவும். இந்த  இணையத்தள முதலுதவி நடவடிக்கை,மருத்துவ அமைப்புகள் ஊடாக அத்தாட்சிபடுத்தப்பட்டுள்ளது.

நீங்கள் படிப்பதற்கு தேவையான அளவை தேர்ந்தெடுக்கலாம்.

அவசரநிலைமைகளை சமாளித்துக்கொள்ளும் அளவுக்கு  பயிலலாம்.

உயர்ந்த மாணவராக ஏனையோருக்கு கற்பி்ப்பதற்கான பயிற்சியை பெற்றுக்கொள்ளலாம்.

மருத்துவராகவோ உதவி மருத்துவராகவோ தொழிலை பெற்றுக்கொள்ளலாம்.

எனினும் எமது நாட்டின் பிரஜைகள் என்ற ரீதியில் பயிற்சி பெற்றுக்கொள்ளலாம். அப்போது இன்னொருதடவை அனர்த்தம் ஏற்படும்போது  இன்னொருவருக்கு உதவலாம்.


நோக்கம்

பொருளடக்கம்
-

இந்த இணையத்தளத்தில் பல்வேறு வகையான ஆக்கங்கள்  உண்டு. இவற்றை திரையின் அளவு மற்றும் கண்பார்வைக்கு அமைய தேர்ந்தெடுத்து பார்வையிடலாம். அருகில்வந்து பார்வையிட்டு வாசித்தல் தொடர்பாக நாம் அதிகமாக கவனம் செலுத்துகின்றோம்.

இணையத்தள தகவல்களுக்கு அனைவரும் ஒரே அளவில் பிரவேசிக்க சந்தர்ப்பம் இருக்க வேண்டும் எனவும் தேவையுள்ளவர்களுக்கு அதனை நிறைவேற்றி்க்கொள்வதற்கு எமது இணையத்தளம் ஊடாகவும் அதன் செயற்பாடுகள் ஊடாகவும் அவர்கள் அதனை முழுமையாக அனுபவி்க்க எம்மால் முடியுமான ஒத்துழைப்பை வழங்க எதிர்பார்க்கின்றோம்.

முழுமையான பார்வையற்றவர்களுக்கும் வயது காரணமாக கண் பார்வை குன்றியவர்களுக்கும் பெரிய எழுத்துக்களை கொண்ட பக்கங்களையும் வடிவமைத்துள்ளோம். 

முதலுதவியை பற்றி கற்று ஏனையோரது உயிரை பாதுகாக்க திறமை இருப்பதற்கும், முதலுதவியை பெற்றுக்கொண்டு தமது வாழ்க்கையை பாதுகாத்து கொள்வதற்கான திறமையும்  அனைவருக்கும் இருக்க வேண்டும்.

 

தமிழ் புத்தகம்

தமிழ் தமிழ் முகாமைத்துவ ஒழுங்கு

முதற்பக்கம்